மின்சாரமோ அல்லது எரிபொருட் செலவோ இன்றி கால்களால் ஓட்டிச் செல்லக்கூடிய சிறிய ரக கார் ஒன்றினை Virtue Cycle Solutions நிறுவனம் வடிவமைத்துள்ளது.
Pedalist எனப்படும் இக்காரானது 34 அங்கு அகலம் உடையதாகவும் 68 தொடக்கம் 91 கிலோகிராம் எடை உடையதாகவும் காணப்படுகின்றது.
இதில் மின் விளக்குகள் உட்பட இலத்திரனியல் ஹோர்ன் ஒன்றும் உள்ளது.
பொலிகார்பனேட்டினால் ஆன வெளி அமைப்பினைக் கொண்ட இவ்வாகனம் எதிர்வரும் 2015ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் பெறுமதியானது 3,500 தொடக்கம் 3,900 டொலர்கள் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக