கடல் வகை உணவுகளிலேயே அதிகம் பேர் விரும்பி சாப்பிடுவது மீன் தான்.
சிக்கன், மட்டனையும் தாண்டி மக்களின் நாவினை ருசியால் சுண்டி இழுத்துவிடும் இந்த மீன்.
மீனில் எண்ணற்ற அளவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பதுடன், முக்கியமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது.
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஆஸ்துமா
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டோர், மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், ஆஸ்துமாவின் தாக்கத்தைக் குறைக்கலாம். அதிலும் குழந்தைகளுக்கு மீன் கொடுத்து வந்தால், ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.
மூளை மற்றும் கண்கள்
மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், மூளைச் செல்கள் மற்றும் ரெட்டினாவின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக உள்ளது. எனவே மீன் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று சொல்கின்றனர்.
புற்றுநோய்
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலில் சீரான அளவில் இருந்தால், பல்வேறு புற்றுநோய்களின் தாக்கத்தை 30-50 சதவீதம் குறைக்கிறது.
அதிலும் வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றின் தாக்கம் குறையும்.
ஞாபக மறதி
வயதாக ஆக வாரம் ஒரு முறை மீனை உட்கொண்டு வந்தால், முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்கலாம்.
கொலஸ்ட்ரால்
மீன் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
நீரிழிவு
நீரிழிவு உள்ளவர்கள், மீனை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.
பார்வைக் கோளாறு
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், மீனை சாப்பிட்டு வந்தால், குழந்தைக்கு தாய்ப்பாலின் மூலம் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது சென்று, அவர்களுக்கு தெளிவான பார்வையைக் கொடுக்கும்.
இதய நோய்
ஒவ்வொரு வாரமும் மீனை தவறாமல் உட்கொண்டு வந்தால், இதயம் சீராக இயங்கி, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கும்.
பொலிவான சருமம்
மீன் சாப்பிட்டால் உடலில் உள்ள பிரச்சனைகள் குறைவது மட்டுமின்றி, அந்த பிரச்சனைகளால் பொலிவிழந்து காணப்பட்ட சருமமும் பொலிவோடு காணப்படும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக