தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

நன்மைகள் அள்ளித்தரும் பீட்ரூட்


வேரிலிருந்து கிடைக்கும் மிக முக்கியமான காய்கறிகளில் ஒன்று பீட்ரூட், அதிகளவில் சத்துக்கள் அடங்கியுள்ளது.
கெட்ட கொழுப்பை கரைப்பதுடன், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது.
பீட்ரூட் ஜூஸ்
தேவையானவை
பீட்ரூட் - 2
புதினா - 1 கைப்பிடி
தேன் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
ஏலக்காய் - 1
பால் - அரை கப்
செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி, சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது தண்ணீரில் போட்டு வைக்கவும். பீட்ரூட்டின் நிறமெல்லாம் அந்தத் தண்ணீரில் இறங்கும்.
அந்தத் தண்ணீரை அப்படியே வைத்துக் கொண்டு, பீட்ரூட்டை மட்டும் எடுத்து, புதினா, ஏலக்காய், உப்பு சேர்த்து மிக்சியில் அடித்து, வடிகட்டவும்.
வடிகட்டிய ஜூசில் தேன் சேர்த்து, பீட்ரூட்டை ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து, பால் விட்டுப் பரிமாறவும்.
பீட்ரூட் சாதம்
தேவையானவை
பீட்ரூட் - 2
பாஸ்மதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகதூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கழுவி குக்கரில் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, மூடி போட்டு மூடி, 3 விசில் விட்டு இறக்கவும்.
பிறகு பீட்ரூட்டை துருவி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, துருவி வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு, சிறிது உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும்.
பீட்ரூட் வெந்ததும் அதனை இறக்கி, சாதத்துடன் கலந்து, கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
பீட்ரூட் அல்வா
தேவையானவை
பீட்ரூட் - 1
பால் - 200 மி.லி
சர்க்கரை - 200 கிராம் (அ) தே.அளவு
ஏலக்காய் - 5 பொடித்தது
ரீஃபைண்ட் ஆயில்
நெய் - தேவையான அளவு
முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் - தலா 10.
செய்முறை
பீட்ரூட்டை நன்றாகக் கழுவி தோல் சீவி துருவவும்.
மிக்சியில் நைஸாக அரைக்கவும். ரீஃபைண்ட் ஆயிலில் லேசாக வதக்கி, பால் சேர்த்து வேக வைக்கவும், வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
கிளறி, சுருள வரும்போது, ஏலக்காய் சேர்க்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம் வறுத்து, இதில் நெய்யோடு சேர்த்து கிளறி இறக்கவும்.

1 கருத்து: