தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 ஏப்ரல், 2015

ஆரோக்கியம் வேண்டுமா? அன்றாடம் இதை சாப்பிடுங்கள்

அன்றாடம் உணவில் நெய்யை சேர்த்துக்கொள்வதால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. நெய்யில் CLA - Conjugated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
மேலும் நெய்யில், ஒமேகா(Omega) 3 என்ற நிறைவுற்ற கொழுப்பு அமிலம்(Saturated fat) - 65 சதவீதமும், மோனோ(Mono) - என்ற செறிவூட்டப்படாத கொழுப்பு(unsaturated fat) - 32 சதவீதமும், லினோலிக்(Linoleic) - என்ற மற்றொரு செறிவூட்டப்படாத கொழுப்பு(unsaturated fat) -3 சதவீதமும் நிறைந்துள்ளது.
நெய்யின் மகத்துவங்கள்
தொடர்ச்சியாக நெய்யை உடலில் சேர்த்து வந்தால், உடல் மற்றும் மனம் உறுதியடைவது மட்டுமின்றி உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம்.
வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.
நெய் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ்(Lactose- A sugar present in milk)என்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.
தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
குடற்புண்(அல்சர்) கொண்டவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு நெய் ஒரு சிறந்த மருந்த.
மேலும் நன்கு ஜீரண சக்தியைத் தூண்டவும் நெய் உதவுகிறது.
வளரும் குழந்தைகளுக்கு நெய் சேர்த்த உணவுகளை கொடுக்கவேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் நெய்சாதம் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது.
நெய் சாதம்
முதலில் அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வடித்து கொள்ளவும். பூண்டை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும்.
ஏலக்காயை லேசாக தட்டிக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றவும்.
காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும். பிறகு முந்திரி சேர்க்கவும்.
பிறகு வடிகட்டிய அரிசியை அடுப்பில் உள்ள நெய்யில் போட்டு கிளறவும்.
இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கர் மூடி போடவும். விசில் போடாமல் மிதமான தீயில் வேகவைக்கவும்.
பத்துநிமிடம் கழித்து சாதம் குழையும் முன் இறக்கி வைத்தால் சுவையான நெய் சாதம் தயார்.
பயன்கள்
ஞாபக சக்தியை தூண்டும்
சரும பளபளப்பைக் கொடுக்கும்
கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
இனிப்புகள்
எல்லாவகை இனிப்புகளிலும் நெய் கலக்கப்படுகிறது, இது நல்ல மணத்தையும், சுவையையும் கொடுக்கிறது.
மேலும், அன்றாடம் உணவில் நெய்யை சேர்த்துக்கொள்வதற்கு சிரமமாக இருந்தால், குழம்பு தாழிக்கும் போது எண்ணெய் பயன்படுத்துவதற்கு பதிலாக நெய்யை பயன்படுத்தலாம்.
இவை நல்ல வாசனையாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக