வாஸனைப் பொடியால் ஆயுதம் போல கோலம் போடல் கோரோசனை பன்னீர் தைலம் இவைகள் உபசாரம் வைர ஆபரணம் சேர்ப்பித்தல், தாமரை மருக்கொழுந்து இவைகளால் பூஜித்தல் கோலாட்டம் அடித்தல் வஸந்தராகக் கீர்த்தனம் குளாந்நம் செய்து விநியோகம் நவமாவ்ரணக் கீர்த்தனையைச் சொல்லி பூஜிக்கவும்.
தியான ஸ்லோகம்
சுபத்ராணி சபக்தா நாம் குருதே பூஜிதா சதகா
அபத்ரநஸிநீ தேவீம் சுபத்ராம் பூஜயாம்யஹம்
9. ராகம் காம்போதி தாளம் சாப்
ஸ்ரீ மத்ஸிம்மாஸனி தீச்வரி சாம்பவி ஸ்ரீ தேவி சிவ
ஸ்ரீ பார்வதி ஜகந்நாயிகே ஸ்ரீமாதாதிரிபுரேச்வரி பாலய
காமேச்வரஹ்லாத காரிணி ஸ்ரீ பத்மகாநத மத்யஸ்திதே
காமேச்வரி சிவசங்கரி கல்யாணி கமலாஸநி பாலய
மங்கள சுகப்ரதே வெங்கடேச்வரநுதே ஸ்ரீ தேவி தேவி சிவே
ஸ்ரீ பார்வதி ஜகந்நாயிகே ஸ்ரீமாதஸ்திரிபுரேச்வரி பாலய
ஸர்வஸ்வரூபே வர்வேசே ஸர்வ சக்திஸமந்விதே
பயேப்யஸ் த்ராஹிநோதேவி துர்கேதேவி நமோஸ்துதே
ஏதத்தே வதகநம் ஸெளம்யம் லோசநத்ரய பூஷிதம்
பாதுந: ஸர்வபூதேப்ய காத்யாயநி நமோஸ்துதே
என்று பிரார்த்திக்கவும்.
நவராத்திரி பாடல்
நாமகளே சரஸ்வதியே நான்முகனின் நாயகியே
நாடி வந்தோம் சந்நிதியே நம்பி வந்தோம் அம்பிகையே (நாமகளே)
அம்புடன் வில் சங்கு சக்கரம் மணிசூலம் உடையவளே
சும்பன் வதம் புரிந்தவளே சுடர்விழியே மலர்மகளே (நாமகளே)
கௌரி அன்னை மேனியிலே கருவாகி மலர்ந்தவளே
நவராத்திரி ஒன்பதாம் நாள் நலம் கூட்டும் கலைமகளே (நாமகளே)
தாயே நீ அன்பு வைத்தால் பார்முழுதும் எனைப்புகழும்
ஏழிசையும் என்பாட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும் (நாமகளே)
நவராத்திரி நிறைவுநாள் சிவலிங்கத்தை பூஜிக்கும் சிவசக்தி ஐக்யஸ்வரூபிணி
சிவசக்தித் தாயே வருக உன் சீர்பாடித் தொழுதோம் வருக
நவராத்திரி நிறைவானதம்மா
வரும் காலம் நாளும் உனதாகுமே (சிவ சக்தி)
ஸ்ரீ சக்தி மலர்பாதம் போற்றி ஓம் சக்தி மணிப்பாதம் போற்றி
அருள்சக்தி திருப்பாதம் போற்றி சிவ சக்தி பொற்பாதம் போற்றி
சிவலிங்க பூஜை புரிக தெய்வ சன்மார்க்கம் தேடிப் பெருக
உவமைக்கு பொருளேது அம்மா
என் உயிரே உணர்வே உமையன்னையே (சிவசக்தி)
ஒன்றாகப் பூத்தாய் திருவே நன்மை ஒவ்வொன்றும் படைக்கும் கருவே
நல்வாழ்வுடன் உன் பார்வையம்மா
மனம் நாடும்பாடும் ஜெகதீஸ்வரி (சிவ சக்தி)
தெய்வீகத் தாய் உன் காட்சி அன்பின்திறம் பாடும்அருளின் சாட்சி
கண்டார்க்கு கொண்டாட்டம் அம்மா
சிவ கனியே மணியே பரமேஸ்வரி
நவராத்திரி பாடல்
நவராத்திரி என்றதும் மங்கையர் எங்களின்
மனமது தேர்ச்சியை பெற்றதம்மா
கவனமாய்க் கொலுதனை உயர்ந்ததாய் வைத்திட
உள்ளமும் மோகத்தைக் கொண்டதம்மா
படிப்படியாகவே பல வித பொம்மையை
விதவிதமாகவே வைத்தோமம்மா
அடிக்கடி பார்த்தாலும் மனமது சலிக்காமல்
பார்த்தே மனம்களி கொண்டோமம்மா
அந்திவேளைதனில் பட்டாடை கட்டியே
அலங்காரம் முழுவதும் செய்து கொண்டோம்
பக்தியாய்க் குங்கும குப்பியுடன் கூடத்
தையல்கள் பலபேரைக் கூட்டி வந்தோம்
பலவித ரூபத்தில் தேவி கொலுவிலே
பரிவுடன் அமர்ந்திட்ட விந்தையதை நீ
கலைவாணி தேவியே பத்மாக்ஷி லக்ஷ்மியே
பார்வதியே என்று பாடினோமே.
ராகாதி எதிரிகள் மனம் வாடிச் சுண்டிட
சுண்டலை செய்துமே வைத்தோமம்மா
பாங்காய் நீ இன்புறத் தித்திப்பு பக்ஷணம்
என்றதை உனக்குமே தந்தோமம்மா
பக்தராம் எங்களின் ஆர்த்தியைப் போக்கிட
பங்கஜ பாதத்தை நமஸ்கரித்தோம்
முத்தால ஹாரத்தி உந்தனுக்கே சுற்றி
மூன்றான சக்தியை போற்றி நின்றோம்
வந்த பெண் யாவரும் உந்தனின் ரூபமே
என்றுமே மனமதைத் தேற்றிக்கொண்டோமே
சந்தனம் பூசியே மஞ்சளாம் குங்குமம்
வெற்றிலை பாக்கையும் தந்து நின்றோம்
உந்தனின் ராத்திரி ஒன்பது ஒருமிக்க
சந்தோஷமாக சென்றதம்மா
பிந்தியும் நீவர வருஷமும் ஒன்றாகும்
என்றுமே மனம் உன்னை நாடுதம்மா
சந்ததம் நீ உந்தன் சேய்களாம் எங்களை
சொந்தமுடன் காக்க வேண்டுமென்றே
அந்தரங்க பக்தி கொண்டுமே பாடிடும்
சுந்தர வார்த்தையை கேளுமம்மா.
நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக