உலகில் ஒவ்வொரு மாதமும் வணிகம், அரசியல், தொழில்நுட்பம் என எல்லாவற்றிலும் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் உலகில் நடைபெற்ற சம்பவங்கள் ஒரு பார்வை,
அச்சுறுத்தும் எபோலா
ஆப்ரிக்க நாடுகள் மட்டுமின்றி அமெரிக்கா, ஜேர்மனி உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் எபோலா வைரஸ் பரவத் தொடங்கியது.
இந்நோய்க்கு இதுவரையிலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து விட்டனர், எனவே அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை படுவிரைவாக எடுத்து வருகின்றன.
மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ்
ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்கிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தினந்தினம் கொடூர செயல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
எனவே அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது.
பெண்களை கட்டாயபடுத்தி திருமணம் செய்து கொள்வதுடன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி சந்தைகளில் விற்று வரும் அவலமும் நடந்து வருகிறது.
மரண தூது சொல்லும் வாட்ச்
மனிதன் இந்த உலகத்தில் வாழும் வாழ்நாளை குறிக்கும் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகியது டிக்கர் (Tikker) என்ற கைக்கடிகாரம்.
பெட்ரிக் கோல்டிங் (batric Kolding) என்பவர், இந்த கைக்கடிகாரத்தை தயாரித்து உள்ளார்.
இந்த கைக்கடிகாரத்தில், உதாரணமாக 41 வருடம், 3 மாசம், 4 நாள், 7 மணிநேரம், 5 நிமிடம், 19 நொடியில நீங்க இறந்து விடுவீர்கள் என்று காட்டும்.
நாய்க்கு உயிர் கொடுத்த பொலிஸ்
ஸ்பெயினில் மயக்கத்தில் இருந்த நாய் குட்டிக்கு வாயோடு வாய் வைத்து பொலிசார் ஒருவர் மூச்சு கொடுத்து காப்பாற்றியது அனைவரையும் ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியது.
ஸ்பெயினின் வெலென்சியா (Valencia) நகரை சேர்ந்த கார்லோஸ் அரனா (Carlos Arana - age 42) என்பவரே நாய்க்கு உயிர்கொடுத்த நபர் ஆவார்.
செவ்வாயில் தரையிறங்கும் 13 வயது சிறுமி
அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த அலிசா கார்சன்(13) என்ற சிறுமி விரைவில் செவ்வாயில் தரையிறங்க உள்ளார்.
அலிசாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும், அவர் ஏற்கனவே இதற்கான பயிற்சியில் இருப்பதாகவும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அலிசா அறிவியல் மற்றும் பல மொழிகளை படிப்பதோடு நாசாவின் மூன்று உலக விண்வெளி முகாம்களிலும் கலந்துகொண்ட முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசுகள் 2014
இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
ஆல்ஃபிரட் நோபெல் என்ற வேதியியலாளரால் 1895ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த பரிசு, நோபல் என்ற அவரின் பெயரிலேயே 1901ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
நோபல் பரிசு ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும், பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தவருக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றமை நினைவுகூரத்தக்கது.
வாழ ஆசையாக உள்ளது, ஆனால் சாகிறேன்
அமெரிக்காவை சேர்ந்த பிரிட்னி மேனார்ட்(Brittany Maynard Age-29) எனும் பெண்ணுக்கு தலையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறிதுசிறிதாக உயிரை பறிகொடுத்து கொண்டிருக்கும் பிரிட்னி, இன்னும் 14 மாதங்கள் மட்டுமே உயிருடன் வாழ்வார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரிட்னி, நான் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு ஏற்பட்ட புற்றுநோய் என்னை அணுஅணுவாய் கொன்று வருகிறது.
கணவரின் பிறந்தநாளை மட்டும் கொண்டாடி விட்டு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என தெரிவிக்கும் வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியது.
இறந்த இதயம் மீண்டும் உயிர் பெற்றது
இறந்து போன இதயத்தை மீண்டும் உயிர்ப்பித்து மற்றொரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை மருத்துவர்களே இச்சாதனையை நிகழ்த்தினர்.
மகளுக்கு பரிசாக தங்க கழிப்பறை
சவுதி மன்னர் தனது மகளின் திருமணத்திற்கு மிக வித்தியாசமாக தங்க கழிப்பறையை பரிசாக அளித்தார்.
சவுதியின் கலாச்சாரத்தின்படி பெண்களுக்குத் தங்க நகைகளை பரிசளிப்பது வழக்கம். அதுவும் குறிப்பாக அவர்களின் திருமணத்தின் போது, மணமகள் வீட்டார் மட்டுமில்லாமல், மணமகன் வீட்டார், உற்றார் உறவினர், நண்பர்களும் பரிசளிப்பார்கள்.
ஜன்னல் இல்லாத விமானம்
உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத டச் ஸ்கரீன் விமானம் விரைவில் வரவுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் ஜன்னல்கள் இல்லாத தொடுத்திரை (ட்ச் ஸ்கிரீன்) விமானத்தை வடிவமைத்துள்ளார்.
இந்த தொழில்நுட்பம் வாயிலாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முழுமையாக வெளியில் உள்ளவற்றை பார்க்கலாம்.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 2 நவம்பர், 2014
மரண தூது! அக்டோபர் உலகம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக