தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 2 நவம்பர், 2014

அழகுடன் ஜொலிக்க வேண்டுமா? ஈஸியாக தயாரிக்கலாம் ரோஜா பேஸ்பேக் !

உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் ரோஜா பேஸ் பேக்கை எளிய முறையில் வீட்டிலே நீங்கள் தயார் செய்யலாம்.
தேனுடன் ரோஜா கலவை
ரோஜா இதழ்களை நீரில் 1 மணி நேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து கொள்ளவும். இதில் தயிர், எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகம், கழுத்தில் போட்டு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
ஓட்சுடன் ரோஜா கலவை
ரோஜா இதழ்களை சூடு தண்ணீரில் போட்டு 30 நிமிடம் வைக்கவும். பின்னர் ரோஜா இதழ்களை பிழிந்து தண்ணீரை தனியாக எடுக்கவும். முகத்தை நன்றாக கழுவி விட்டு அரைத்த ஓட்சுடன் ரோஜா தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து முகம், கழுத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.
கடலை மாவுடன் ரோஜா கலவை
ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து கொள்ளவும். அதில் கடலை மாவு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் போட்டு நன்றாக காய விடவும். காய்ந்ததும் பால் அல்லது தண்ணீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக