நாசா அறிவித்துள்ள இச்செய்தி தொடர்பான ஆய்வை லங்காசிறி வானொலி தனது நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் மேற்கொண்டிருந்தது.
இது குறித்து ஆய்வாளர் சுரேஸ் தர்மா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
சூரியப் புயல் டிசம்பர் மாதத்தையொட்டியதாக இடம்பெறப் போகிறது. உலகம் ஆறு நாட்கள் இருளில் மூழ்கப் போகிறது என்ற செய்தி ஒரு சிறிய உண்மை கலந்த ஒரு பெரிய பொய்.
நாசா ஒக்டோபர் மாதம் 18ம் திகதி தாங்கள் சூரிய மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஒரு எரிவுநிலை பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தது.
கிரகணத்தைப் பார்க்கும் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி இந்த சூரியப் புயலின் வடுவை பார்க்கக் கூடியதாக இருந்தது என்பதைத் தெரிவித்திருந்தது.
சூரியப் புயல் பற்றிய பல தெளிவான தகவல்களையும், கடந்த காலங்களில் ஏற்பட்ட சூரியப் புயலின் விளைவுகள், சூரியப் புயலால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த தகவல்களையும் இந்த நிகழ்வில் பகிந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக