தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 நவம்பர், 2014

மன்னார் வங்காலையில் நிலத்தடி நீர் 24 மணி நேரமும் பாயும் அதிசய காட்சி(படம் இணைப்பு)!


வங்காலையூடாக நானாட்டான் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் உள்ள பாலம் புனரமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து தொடர்ச்சியாக நீர் பாய்ந்துக்கொண்டிருக்கும் அதிசயத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

வங்காலை இரத்தினபுரி கிராமப்பகுதியிலே குறித்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீதி மற்றும் பாலம் சேதமடைந்துள்ள நிலையில் குறித்த பாலத்தை புனரமைப்பு செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த வீதிக்கு அருகாமையில் பரிசோதனைக்காக பள்ளம் தோண்டிய போது தொடர்ச்சியாக நீர் பாய ஆரம்பித்தது.


நிலத்தடி நீரே ஊற்றாக 24 மணி நேரமும் பாய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை(23) மாலை குறித்த பகுதிக்குச் சென்ற வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் குறித்த நீர் பாய்ந்து கொண்டிருப்பதை பார்வையிட்டதோடு பாய்ந்து கொண்டுள்ள நீரையும் சுவைத்துப்பார்த்தார்.

இதன் போது கருத்துத்தெரிவித்த அமைச்சர் பா.டெனிஸ்வரன்.


குறித்த நீர் 24 மணி நேரமும் பாய்ந்து கொண்டிருக்கின்றது. குடிப்பதற்கு சுவையாக உள்ளது.குறித்த நீரை சுத்தம் செய்து மக்களின் பாவனைக்கு பயண்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அருகில் கடல் இருக்கின்ற போதும் நீரில் எவ்வித உவர்ப்புத் தன்மையும் இல்லை.நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்.வங்காலை மக்களும்,அதனை சூழ்ந்துள்ள கிராம மக்களும் குறித்த நீரை பயண்படுத்தக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்விடையம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
03 Nov 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக