தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 நவம்பர், 2014

வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், பிட்டாகவும்(அப்படீன்னா?தமிழ்க் கொலைதானே!) இருக்க 10 சிறந்த வழிகள்!!!


நம்முடைய உடம்பை நாம் தான் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்கு நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல், மலை ஏற்றம், யோகா என்று நிறைய விஷயங்கள் நமக்குக் கை கொடுக்கும்


மேலும், நல்ல உணவுப் பழக்கவழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். சிக்கன், மட்டன், முட்டை, பச்சைக் காய்கறிகள் என்று நன்றாக சாப்பிட வேண்டும்; ஆனால், எடை போட்டு விடக் கூடாது


நாம் நம் உடம்பை நன்றாகப் பராமரித்து, அதை சிக்கென்று வைத்துக் கொள்ள பத்து சிறந்த வழிகள் உள்ளன. அதை நம் வாழ்வில் கடைசி வரை கடைப்பிடித்தால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இதோ அந்தப் பத்து வழிகள்


பாடி ஃபிட்னெஸ்சுக்குத் தேவையான 10 கட்டளைகள்!!
மாரத்தான்!


பல முக்கியமான நகரங்களில் மாரத்தான் என்னும் நீண்ட தூர ஓட்டப் பந்தயம் நடத்தப்படுவதுண்டு. யாராவது ஒருவர்தான் முதலிடத்தைப் பிடிக்க முடியும் என்றாலும், இதுபோன்ற பந்தயங்களில் கலந்து கொள்வதே பெரிய விஷயமாகும். அடிக்கடி இதுபோன்ற மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு நீண்ட தூரம் ஓடினால், உடம்புக்கு நல்லது.


5 நொடிகளில் 40 அடி...

நீண்ட தூரம் ஓடுவது சிரமமாகவும், மலைப்பாகவும் உள்ளதா? ஒரு 40 அடி தூரத்தையாவது முயற்சி செய்யுங்கள்; ஆனால், ஐந்தே நொடிகளில் இந்தத் தூரத்தைக் கடக்க வேண்டும். இதற்கான பயிற்சியை நன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பயிற்சியே உங்கள் உடம்பை சூப்பராக ஃபிட்டாக்கும். எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்


50 புஷ்-அப்கள்...


உடம்பை முறுக்கேற்ற ஜிம்முக்குத்தான் போக வேண்டும் என்ற அவசியமில்லை. இடைவிடாமல் 50 புஷ்-அப்களை மட்டும் செய்து வந்தால் போதும். மார்பு நன்றாக விரிவடையும். தசைகள் இறுக்கமடையும். தொப்பை இருந்தால் காணாமலே போகும்
இடுப்பளவைக் குறைக்க...


உடற்பயிற்சி செய்து உடல் எடையை எளிதாகக் குறைத்து விடலாம். ஆனாலும், இடுப்பளவை ஒரு இரண்டு செ.மீ. குறைப்பதில் தான் நம் திறமையே இருக்கிறது. அவ்வாறு குறைப்பதால், நம் உடம்பும் ஒருவித நளினத்தோடு இருக்கும். இதயம் மற்றும் சர்க்கரை வியாதிகளும் அண்டவே அண்டாது


ட்ரையத்லான்!


மாரத்தான் போலவே ட்ரையத்லான் போட்டிகளும் அவ்வப்போது நடக்கும். ஓட்டம், சைக்கிள் ஓட்டம் மற்றும் நீச்சல் ஆகிய மூன்றையும் அடுத்தடுத்து செய்வதுதான் ட்ரைய்த்லான். தொடர்ந்து இதை மேற்கொள்வதால் நம் உடம்பு எப்படி முறுக்கேறும் என்பதை நீங்களே கொஞ்சம் யூகித்துக் கொள்ளுங்கள்!


ஒரு வார டயட்!


சமைக்கப்படாத உணவு வகைகளை ஒரு வாரத்திற்குத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை ஆட்டோமேட்டிக்காகக் குறைந்து விடும். ஒபிஸிட்டி எனப்படும் தொப்பைப் பிரச்சனைக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். முழுக்க முழுக்க இயற்கையான உணவு வகைகளை மட்டும் சாப்பிட்டு, அப்படியே உடம்பைப் பராமரித்து விடலாம்


பழங்கள், காய்கறிகள்!


உடம்பை ஸ்லிம்மாக வைத்திருக்க பழங்களையும் பச்சைக் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்வது நல்லது. தினமும் ஐந்து முதல் பத்து பழங்கள் வரை சாப்பிட வேண்டும். அதேபோல் நிறையக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலின் அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமாக இருக்கும்


புது விளையாட்டு!


நீங்களாகவே புதிதாக ஒரு விளையாட்டைக் கற்றுக் கொண்டு, அதிலேயே கவனம் செலுத்துங்கள். மலை ஏற்றம் போன்ற சாகசங்களில் ஈடுபட வேண்டும். அதற்கு அதிக முக்கியத்துவம் தரத் தர உடம்பிலுள்ள தசைகள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு முறுக்கேறும்


உட்காரும் பயிற்சி!


ஒரு காலில் மாறி மாறி உட்கார்ந்து எழுந்திருக்கும் பயிற்சி மிகவும் சிறந்தது. இது நல்ல பலனைத் தருமா என்ற சந்தேகமே வேண்டாம். மேலும், இதற்காக ஜிம்முக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் அன்றாட உடற்பயிற்சிகளில் இதைக் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்; மறந்தே விடாதீர்கள்!


கொழுப்பைக் குறைக்கணும்!


நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்தாலே உடல் எடை மளமளவென்று குறைந்து விடும். ஒரு 5% குறைத்தாலே நல்ல ரிசல்ட் கிடைக்கும். வாரத்திற்குக் குறைந்தது ஒரு கிலோ எடையாவது குறைந்துவிடும். இது போதாதா? மூன்று மாதங்களில் எப்படி ஸ்லிம் ஆகி இருப்பீர்கள் என்று இப்போதே கற்பனை செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக