தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 நவம்பர், 2014

சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை கட்லெட்!

வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கிய முருங்கை கீரை எண்ணற்ற நோய்களை குணப்படுத்தக்கூடியது.
கண் நோய்களுக்கு மருந்தாக இருப்பதுடன், இரத்த சோகையையும் தடுக்கிறது.
இதனை கொண்டு செய்யப்படும் கம்பு- முருங்கை கீரை கட்லெட் சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியம் நிறைந்தது.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு: 100 கிராம்
சோள மாவு: 100 கிராம்
கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு: சிறிதளவு
முருங்கை கீரை: 50 கிராம்
உப்பு, எண்ணெய்: தேவையான அளவு
செய்முறை
கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
நறுங்கிய காய்கறிகள் மற்றும் முருங்கை கீரையை வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சோள மாவு, கம்பு மாவு உப்பு போட்டு அதில் வேக வைத்த காய்கறிகளை போட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும், தேவையான வடிவில் தட்டி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான கட்லெட் ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக