இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து முருகப் பெருமான் தேரில் ஏறி மக்களுக்கு அருள்பாலித்தார்.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
தூக்குக்காவடிகள், காவடிகள், அங்கபிரதிஷ்டை, பாற்செம்பு உள்ளிட்ட நேர்த்திக் கடன்களையும் அடியவர்கள் நிறைவேற்றினர்.
மண்டூர் முருகன் தீர்த்தம்
கிழக்கிலங்கை சின்னக்கதிர்காமம் என்று பெயர்பெற்ற மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று முருகப்பெருமானின் தீர்த்தோற்சவம் மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றது.
கந்தனுக்கு 20 நாள் திருவிழா இடம்பெற்று 21ஆம் நாளான இன்று கந்தன் புஷ்பவாகனத்தில் தீர்த்தமாடுவதற்காக வாவிக்கரை ஓரத்தில் உள்ள சபா மண்டபத்தினை அடைந்து அங்கு சற்று நேரம் ஓய்வெடுத்து அடியார்கள் புடைசூழ தீர்த்தக்கரையில் தீர்தமாடி பக்தர்கள் குறை தீர்த்தார்.
அதன்பின்னர் ஆலயத்தில் இறுதி நாளான இன்று மிகவும் விசேட நிகழ்வான 4 கன்னிமார் முருகப்பெருமானுக்கு ஆலாத்தி எடுத்து செல்லும்போது அவர்கள் தெய்வானை அம்மன் கோயிலை அடைந்ததும் வில், அம்பு கொண்டு செல்பவர்களுடன் சேர்த்து ஏனைய 4 கன்னிகளும் மயக்கமுற்றதன் பின்னர் அவர்களை வள்ளியம்மன் ஆலயத்திற்கு எடுத்துச்சென்று அவர்களுக்கு முருகப்பெருமானின் அபிசேக நீர் தெளித்து அவர்களை மயக்கத்தில் இருந்து விடுபடச்செய்யும் நிகழ்வானது பக்தி பரவசமூட்டும் நிகழ்வாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் ஆலயத்தில் ஆகமம் சாராத மௌன பூஜை வழிபாடுகள் நடைபெறுகிறது. இவ் வழிபாடானது பண்டைத்தமிழர்களின் வழிபாட்டோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது.
இன்றும் பண்டைய மரபும், அவர்களது அடையாளங்களும் பேண்பட்டு வருகின்றமையும் இந்த ஆலயததின் சிறப்புகளில் ஒன்றாகும்.
இன்றும் பண்டைய மரபும், அவர்களது அடையாளங்களும் பேண்பட்டு வருகின்றமையும் இந்த ஆலயததின் சிறப்புகளில் ஒன்றாகும்.
மண்டூர் கந்தசுவாமி ஆலயம் 12ஆம் நுற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டது என்றும், வேடுவர்களால் கொத்துப்பந்தல் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்தஆலயம் என்றும் வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றது.
12ஆம் நூற்றாண்டில் இப் பகுதியை ஆட்சி செய்த மண்டு நாகன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்ற போதிலும் இவ் ஆலயம் இவனால் கட்டப்படுவதற்கு பன்னெடுங்காலத்துக்கு முன்னரே இப்பகுதியில் வாழ்ந்த வேடுவர்களால் கொத்துப் பந்தல் அமைத்து வழிபடப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வருடாந்த உற்சவத்தினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்துசேர்ந்தனர்.
இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் மூங்கிலாறும் மட்டக்களப்பு வாவியும் சங்கமிக்கும் இடத்தில் அமையப்பெற்றுள்ள தீர்த்தக்கரையினில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
தங்கவேல் தாங்கிய பேழை கொண்டுவரப்பட்டு இந்த தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீர்த்தோற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து இலட்சக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக