தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

ஒல்லிக்குச்சி உடம்புக்கு என்ன காரணம்?

நானும் எல்லாரும் போலத் தான் சாப்பிடுறேன், ஆனா ஒல்லியாகவே இருக்கிறேன் என பலரும் கூறுவதுண்டு.
நன்றாக சாப்பிட்டால்தான் திடகாத்திரமான உடலை பெற முடியும் என்பது பொதுவான நம்பிக்கை.
ஆனால் நன்றாக சாப்பிட்டாலும்கூட சிலர் மட்டும் ஏன் எப்போதும் ஒல்லியாகவே இருக்கிறார்கள் என்பது இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்துள்ளது.
ஆனால் சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் இந்த புதிருக்கு விடை கிடைத்துள்ளது.
அதாவது, ஒல்லியாக இருப்பதற்கு அவர்களுடைய மரபணுக்களில் இருக்கும் மாற்றம் என்று தெரியவந்துள்ளது.
ஒருவரின் உயிரணுக்களில் உள்ள குரோமோசோம் 16லுள்ள குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தால், சம்பந்தப்பட்டவர் மிகவும் ஒல்லிப்பிச்சானாகவே இருப்பார் என்பது தெரியவந்துள்ளது.
ஆக, 2000 பேரில் ஒருவருக்கு குரோமோசோம் 16லுள்ள குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருப்பதால், உலக ஆண்கள் 23 சதவீதமும், பெண்கள் 5 சதவீதம் பேரும் குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆமாம், ஏன் சில மரபணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன?
பொதுவாக நாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போது நம் தாய் மற்றும் தந்தையிடமிருந்து 23+23 குரோமோசோம்களை பெறுகிறோம். ஒவ்வொரு குரோமோசோமிலும் பல நூறிலிருந்து ஆயிரம் மரபணுக்கள் இருக்கும்.
ஆக, ஒன்று தாயிடமிருந்து, மற்றொன்று தந்தையிடமிருந்து பெறுவதால், நம் உயிரணுக்களில் உள்ள ஒவ்வொரு மரபணுவும் இரண்டு என்ற எண்ணிக்கையில் இருக்கும்.
ஆனால் சில சமயங்களில் ஒரு குரோமோசோமின் சில பகுதிகள் இரட்டிப்பாகவும், சிதைந்து துண்டிக்கப்பட்டு விடும் வாய்ப்புகள் இருப்பதால், நம் மரபணு எண்ணிக்கை இயல்புக்கு மாறாக அதிகமாக அல்லது குறைந்து போகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக