தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 செப்டம்பர், 2014

வசீகரிக்கும் அழகு வேண்டுமா? அனைவருக்கும் ஏற்ற சூப்பர் பேஷியல் !

முகப்பருக்கள் மற்றும் கறைகளை நீக்குவதில் முல்தானி மெட்டி மிக முக்கிய பங்காற்றுகிறது.
முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன், சருமத்தை மிருதுவாகவும் மாற்றுகிறது.
இது எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டதால், அனைத்து விதமான சருமத்தினரும் பயன்படுத்தலாம்.
* கோடை காலத்தில் சில ஒவ்வாமை(அலர்ஜி), சருமம் சிவத்தல் மற்றும் தடித்தல் இருந்தால் முல்தானி மெட்டி ஒரு நல்ல நிவாரணியாகவும் பயன்படுகிறது.
* எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்கள் முல்தானி மெட்டியுடன் ரோஜா நீர் சேர்த்து பேஸ் பேக் போட்டால் மென்மையான முகத்தை பெறலாம்.
* உலர்ந்த மற்றும் தடிமனான தோல் உடையவர்கள் முல்தானி மெட்டியுடன் பாதாம் பேஸ்ட் மற்றும் பால் கலந்து பேஸ் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பொலிவடைவதை காணலாம். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* சிலருக்கு பருக்கள் மற்றும் அம்மை நோய்களால் ஏற்பட்டு தழும்புகள் இருக்கும். அவர்கள் முல்தானி மெட்டியுடன் 1 டீஸ்பூன் அரைத்த கேரட் விழுது மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் போட்டு 20 நிமிடம் ஊற வைத்து முகத்தை கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரம் 2 அல்லது 3 நாட்கள் செய்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதை காணலாம்.
* முல்தானி மெட்டியுடன் அரைத்த பாதாம் விழுது மற்றும் கிளிசரின் சேர்த்து முகத்தில் போட்டால் கரும்புள்ளிகள் படிப்படியாக மறையும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக