தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

முகம் பட்டுப்போன்று பிரகாசிக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும் ஏற்ற பழமாகும்.
ஆப்பிள் பழத்‌‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு நன்றாக மசித்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசவு‌ம்.
அரை மணி நேரம் முக‌த்‌தி‌ல் ஊறவிட்டு, ‌பிறகு கு‌ளி‌ர்‌ந்த ‌நீரா‌ல் முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் புது‌ப் பொ‌லிவு பெறு‌ம்.
இதே‌ப் போல ஆப்பிள் பழத்துண்டுகளை தோ‌ல் ‌நீ‌க்‌கி ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வை‌க்கவு‌ம்.
ந‌ன்றாக கொ‌தி‌த்தது‌ம் அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு ‌பிறகு அதை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள்.
இப்படி தினமும் செய்து வாருங்கள். ‌நீ‌ங்க‌ள் வறண்ட சருமம் கொ‌ண்டவராக இரு‌ந்தா‌ல் சரும‌‌ம் மு‌ற்‌றிலுமாக மா‌றி‌விடு‌ம். முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக