தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 செப்டம்பர், 2014

ரோஜாப் பூ போன்ற கன்னங்கள் வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்களேன்

பெண்கள் அனைவருக்குமே தங்கள் முகம் பளபளவென்று மின்ன வேண்டும் என்று தான் ஆசை.பொதுவாகவே கன்னங்கள் பளபளப்பாக இருந்தால் முகம் பொலிவாகத் தான் தெரியும்.
சில ஆரோக்கியமான முறைகளை வீட்டிலேயே செய்வதன் மூலம் அழகான கன்னங்களை பெறலாம்.
பீட்ரூட்
கருஞ்சிவப்பு நிற காயான பீட்ரூட் சருமத்திற்கு பொலிவை தரக்கூடியது, இரண்டு அல்லது மூன்று பீட்ரூட்களை வேக வைத்து அதை நன்கு மசித்துக் கொள்ளவும்.
இதனுடன், மூன்று ஸ்பூன் கவுலின் பவுடர் சேர்த்து கலக்கி முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்து தடவி விடவும்.
மைசூர் பருப்பு
சிறிதளவு மைசூர் பருப்பை 30 நிமிடம் ஊறவைத்து பின்னர், பசை போன்று அரைத்து கொள்ளவும்.
இதனுடன் கவுலின் பவுடரை கலந்து, முகத்தில் பூசிய பின்னர் 20 நிமிடம் கழித்து கழுவி விடவும்.
கடலை மாவு, பால் கிரீம்
2-3 ஸ்பூன் கடலை மாவுடன், ஒரு ஸ்பூன் பால் க்ரீம், 3 ஸ்பூன் கடலை மாவு மற்றும் 3 ஸ்பூன் தயிர் சேர்த்து முகத்தில் தடவு 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
வெள்ளரிக்காய்
சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிப்பதில் வெள்ளரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
வெள்ளரிக்காயை அரைத்து முகம் முழுவதும் தடவினால் இறந்து செல்களை அகற்றுவதுடன், கருவளையங்களையும் நீக்கி விடுகிறது.
எலுமிச்சை மற்றும் பால் மசாஜ்
கால் கப் எலுமிச்சை சாற்றை, பாலுடன் கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
இது முகத்துக்கு பொலிவை தருவதுடன், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக