விண்கற்களால் மனித இனம் அழிந்து போகும் அபாயம் உள்ளதாக இங்கிலாந்து நாட்டின் இயற்பியல் பேராசிரியர் பிரையன் காக்ஸ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2014 ஈ.சி. என பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஆனது கடந்த மார்ச் மாதத்தில் 38,300 மைல்கள் தொலைவில் நெருங்கி வந்து பூமியை கடந்து சென்றுள்ளது.
பூமிக்கு, இந்த ஒரு விண்கல் மட்டுமல்லாமல் அதிக தீங்கு விளைவிக்கும் 1,400 விண்கற்கள் அச்சுறுத்தலாய் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது.
இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் விண்கல் தாக்கலாம் என்பதால் நம்மால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் இதுவே தற்போது அனைவருக்கும் மிகப்பெரிய கவலையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக