நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும்.
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப நெய்யை அளவோடு எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமானது தான்.
ஏனெனில் சுத்தமான நெய்யில் ஃபேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகள் 89 சதவிகிதம் குறைவாக உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம், ஒருநாளைக்கு 10-15 கிராம் நெய் தான் உடலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
• தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது, இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
• உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
• கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம்.
வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.
• நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை, அதை கைபடாமல் வெளியில் வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது, அதனால் நெய்யில் மாற்றம் ஏற்படாது.
• நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.
• வைட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்,
• உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை, அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். தினம் நாம் உணவில் நெய் சேர்த்து உடல் ஆரோக்கியம் பெறலாம்.
• நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக