செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நாசா விண்வெளி மையத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட கியூரியோசிட்டி ரோவர் விண்கலமானது மலை ஒன்றின் உச்சியை சென்றடைந்துள்ளது.
நாசா விஞ்ஞானிகளால் பெயரிடப்பட்ட Gale பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள மலைப் பகுதி ஒன்றிலேயே ரோவர் விண்கலம் தற்போது ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை வழமையாக திட்டமிடப்பட்ட பாதையை விட்டு விலகி குறுக்கு வழி ஒன்றில் ரோவர் விண்கலம் பயணித்துவருவதாக நாசா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அலுமினியத்தினால் வடிவமைக்கப்பட்ட ரோவர் விண்கலத்தின் சில்லுகள் செயற்படுவதற்கு குறித்த பாதையானது கடினமானதாக இருந்தமையினால் மணல் நிறைந்த புதிய பாதை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக