மகரந்த சேர்க்கை என்பது பாலியல் இனப்பெருக்கத்துக்காக "மகரந்தத்தூள்கள்" ஒரு தாவரத்தில் இருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான ஒரு வழிமுறை ஆகும்.
மகரந்தத்தூள் ஆண் பாலணுக்களையும், சூல்வித்திலைகள் பெண் பாலணுக்களையும் கொண்டுள்ளன.
இரண்டு வகையான மகரந்தச் சேர்க்கைகள் உள்ளன.
ஒரு தாவரத்தில் உள்ள மலருக்குள்ளே நடைபெறும் நிகழ்வு தன் மகரந்த சேர்க்கை என்று அழைக்கப்படுகிறது.
மகரந்தத் துகள்கள் ஒரு தாவரத்தின் ஒரு மலரிலிருந்து மற்றொரு தாவரத்தில் உள்ள ஒரு மலரின் சூல்முடிக்கு மாற்றப்படும் நிகழ்ச்சி அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
மகரந்த சேர்க்கையை மட்டுமே நோக்கமாக கொண்டு பூக்கும் மலர்களால் சுயமாக மகரந்த சேர்க்கையை ஏற்படுத்தி கொள்ள முடிவதில்லை.
இந்த காரணத்தால் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்தக் கூடிய பறவைகள், பூச்சிகளை ஈர்க்க சில மலர்கள், பரிணாம வளர்ச்சியின் உதவியுடன் பல ஆச்சர்யமூட்டும் தோற்றங்களை இயற்கையாகவே பெறுகின்றன.
அந்த மலர்கள் விதவிதமான வண்ணங்களில் குரங்கு, மனிதன், மனித உதடுகள், சிரிக்கும் வண்டுகள், நடனமாடும் பெண்கள், துணியால் சுற்றப்பட்ட கைக் குழந்தை, பறக்கும் கிளிகள், மனித மண்டைஓடு, பறக்க முயலும் வாத்து, புலியின் முகம் என்று பல தோற்ற அமைப்புகளை பெற்றுள்ளதால் மற்ற உயிரினங்களை கவர்கின்றன.
இதன் மூலம் அந்த மலர்களில் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக