தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 செப்டம்பர், 2014

குதூகலமான வாழ்க்கைக்கு...மகிழ்ச்சியின் ரகசியங்கள்!


அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஓய்வெடுப்பது மிக மிக குறைவாகவே உள்ளது.
ஓய்வு என்றால் வெறும் கண்ணை மூடி உறங்குவது மட்டுமல்ல.
அமைதியான சூழல்
அதிகாலை 5 மணி அளவில் வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும், அப்பொழுது தான் எந்தவித பதற்றமோ, படபடப்போ இருக்காது.
அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளை முறையான வழியில் திட்டமிட வேண்டும், திட்டமிடல் வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
புத்துணர்ச்சி தரும் யோகா
தியானம், யோகா ஆகியவை மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்தால் மனதிற்கும், உடலுக்கும் நல்ல ஓய்வு நிலைக்கு கொண்டு வரும்.
குஷிப்படுத்தும் நடனம்
மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது, வாய்விட்டு சிரிப்பது, பாடலுக்கு நடனமாடுவது போன்ற சின்ன சின்ன நிகழ்வுகள் நம் மனதை லேசாக்கும்.
“வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்” அது போல் நாம் சிரித்தால் மிகப்பெரிய ஓய்வு நிலையை ஏற்படுத்தும். நாம் அன்றாடம் செய்யும் வேலையில் உள்ள சுமைகளை குறைப்பதில் நகைச்சுவைக்கு பங்குண்டு.
மேலும் அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் பேசி சிரிப்பது ஒரு ஓய்வு மனநிலையை தரும், பணி சுமையை குறைக்கும்.
குடும்பத்துடன் குதூகலம்
வீட்டிற்கு வந்து தொலைக்காட்சி மற்றும் டிவிடியில் நகைச்சுவையான படங்கள் மற்றும் குடும்பத்தினருடன் சிரித்து மகிழ்வது, நண்பர்களுடன் அரட்டை போன்றவையும் பதற்றமான நிலையை துரத்தி மனதை லேசாக்கி விடும்.
விடுமுறை நாட்களில் சற்றே மாற்றமாக சமையலில் உதவி செய்வது, துணி துவைப்பது என வீட்டு வேலைகளில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய ஓய்வினை தரும், மாலை நேரங்களில் காற்றாட நடப்பதும் சற்று ஓய்வினை தரும்.
இரவு உறங்க செல்வதற்கு முன் அன்றைய தினம் நடந்தவற்றை ஆராய்ந்தால், மனம் முற்றிலும் தூய்மைப்பெற்று ஆழ்ந்த உறக்கம் உண்டாகும். அப்புறம் சோர்வு எங்கே எட்டிப்பார்க்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனம் தான். எனவே மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு நம் கையில் தான் இருக்கிறது, அப்புறம் என்ன வாழ்க்கையே மிக சந்தோஷமாகத் தான் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக