தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 செப்டம்பர், 2014

தற்கொலைகளுக்கு என்ன காரணம்?

உலகளவில் தற்கொலைகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகில் தற்கொலை அதிகம் நிகழும் நாடுகள் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் எட்டு இலட்சம் பேர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர தற்கொலைகள் குறித்து ஊடகங்கள் அதிகம் செய்தி வெளியிடுவதும் ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, உலகம் முழுவதும் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
அதாவது 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இந்தத் தற்கொலைகளில் பெரும்பாலானாவை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுபவை ஆகும்.
இதில் சுமார் 75 சதவிகித தற்கொலைகள் எல்லாம் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் தான், தற்கொலை எண்ணம் மனதில் உதித்த உடனே அவர்கள் நினைவுக்கு வருவது பூச்சிக் கொல்லிகள் தான்.
எனவே பூச்சிக்கொல்லி விற்பனையை கட்டுப்படுத்தினாலே தற்கொலைகளை தடுத்து விடலாம்.
அவுஸ்திரேலியா, கனடா, ஜப்பான், நியூஸிலாந்து, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்குப் பூச்சிக்கொல்லிகள் எளிதில் கிடைப்பதில்லை, எனவே தற்கொலைகள் குறைவாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்கொலைகளைத் தடுப்பதில் அரசுகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், தற்சமயம் 28 நாடுகளே தற்கொலைகளைத் தடுக்கும் திட்டங்களை வைத்திருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக