தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

பூக்கள் தரும் ஆரோக்கியம்!

சில பூக்கள் மனிதனுக்கு ஆரோக்கியமான மருத்துவ குணங்களை அள்ளித்தருகிறது.
அந்த வகையில் செம்பருத்தி, வாழைப் பூ மற்றும் வேப்பம் பூ தரும் மருத்துவ குறிப்புகள் இதோ,
செம்பருத்திப் பூ
செம்பருத்திப் பூ பொதுவாக தாது விருத்திக்கு நல்லது. செம்பருத்திப் பூவைச் சேகரித்து அதன் மத்தியில் உள்ள காம்புகள் மற்றும் இதழ்களை மட்டும் எடுத்து வெய்யிலில் காயவைக்க வேண்டும்.
நன்றாக காய்ந்தபின் சுத்தப்படுத்தி அரைத்து தூளாக்கி விடவேண்டும் இந்தத் தூளை வேளைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து பசும்பாலில் இட்டுக் காய்ச்சி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் தாது புஷ்டி ஏற்படும், உடல் கட்டு உண்டாகும்.
தேகத்தில் மினுமினுப்பு உண்டாகும், செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் கஷாயம் செய்து இரண்டு நாளைக்கு ஒரு வேளை இரண்டு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான நோய்கள் நீங்கும்.
வாழைப் பூ
வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் சீதபேதிக்கும் , இரத்த மூலத்துக்கும் வாழைப் பூ மிகவும் நல்லது.
வாய்ப்புண் மற்றும் வயிற்று புண்களுக்கும் இது சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது.
மேலே குறிப்பிட்ட நோய்களுக்கு வாழைப் பூவை அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொண்டால் பயன் அடையலாம்.
வேப்பம் பூ
வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள்வேப்பம் பூ பித்தம் தொடர்பான எல்லா விதமான பிணிகளையும் முற்றிலும் குணமாக்கும் வல்லமை கொண்டது.
வேப்பம் பூவையும், நில வேம்பையும் சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிட அஜீரணக் கோளாறுகள் நீங்கி நல்ல பசியெடுக்கும். கொஞ்சம் வேப்பம் பூவுடன் இரண்டு அல்லது மூன்று மிளகை வைத்து அரைத்து சுண்டைக்காய் அளவு குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கிருமிகள் செத்து மலத்தோடு வந்துவிடும்.
கிராமப் புறங்களில் குழந்தையின் வயிற்றில் உள்ள பூச்சிகளை கொள்வதற்கு வேப்பம் கொழுந்தை மைப்போல் அரைத்து அதில் நீர்கலந்து ஒரு அவுண்ஸ் அளவு கொடுப்பது வழக்கம்.
பெரியவர்கள் அதிகாலையில் வேப்பங் கொழுந்தை சிறிது பறித்து சாப்பிட்டு வர வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை ஒழிக்கலாம். இது ஒரு சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக