தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

ஆள் நடம்மாட்டம் இல்லாத அழகிய நகரங்கள்

உலகில் அனைவருக்குமே ரொம்ப பிடித்த விஷயம் ஊர்சுற்றுவது தான்.
உலகம் முழுவதும் உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்கள் அனைத்தும் அற்புதமான சுற்றுலா தளம்தான், அவ்வகையில் மக்கள் மனதிலிருந்து மறைந்து போன அற்புத சுற்றுலா தளங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட்டுள்ள அனைத்து இடத்திலும் தற்போது எவரும் வாழாமல் மறைக்கப்பட்ட ஒரு இடமாகவே அமைந்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
க்ரகோ, இத்தாலி
பேய் நகரம் என அழைக்கப்படும் இந்த கட்டிடங்கள் இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ளது. இங்கு மக்கள் எவரும் வாழவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பகுதியில் உள்ள சுற்று சூழலை மக்கள் ரசித்து செல்கின்றனர். க்ரகோ நகரில் உள்ள 1892 – 1922 இடைப்பட்ட காலத்தில் நிலச்சரிவு, மோசமான விவசாய நிலங்கள் மற்றும் வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டு, இந்தியா
மத்திய பிரதேசத்தில் உள்ள மண்டு பகுதியில் 1401 முதல் 1561ம் ஆண்டு வரை மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
தற்போது இதில் எவரும் இல்லாததால் மக்கள் கோயில்கள், கல்லறைகள், மசூதிகள் மற்றும் நினைவிடங்களை ரசித்து செல்கின்றனர்.
போடி, கலிபோர்னியா
போடி நகரம் முந்தைய காலத்தில் தங்க சுரங்கமாக செயல்பட்டு வந்துள்ளது. இதனை போடி தேசிய மாநில பூங்கா என அனைவராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
இங்கு தங்கம் தீர்ந்த பின், வேலையில்லாததினாலும், பிழைப்பிற்கு வேறு எந்தவித தொழிற்சாலைகளும் இல்லாததால் மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
சின்குட்டி, மருதானியா. ஆப்ரிக்கா
11 மற்றும் 12 நூற்றாண்டில் கட்டப்பட்ட சின்குட்டி நகரம் சஹாகாரா பாலைவனத்தை கடக்க முக்கிய வணிக வழிதடமாக கருதப்பட்டது.
இந்த நகரில் ஷரன் கட்டிடக்கலை மற்றும் பல பண்டைய அறிவியல் மற்றும் குர்ஆன் வசனங்களை காணலாம் என்பது குறிப்பிடதக்கது.
சகிக்க முடியாத வானிலை காரணமாக மக்கள் இங்கிருந்து இடம் பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லயான் சிட்டி, சீனா
ஜிஜியாங் மாகாணத்தில் இயாங்டோ நதியின் அடியில் அமைந்திருக்கும் லியான் சிட்டி 1300 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இதில் 1959ம் ஆண்டு முதல் மக்கள் வாழ்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அழகிய நீல வண்ண கடற்கரையின் அடியில் உள்ள ஆர்நேட் சிங்கம் சிற்பம் லியான் நகரை காத்து வருவதாக நம்பப்படுகிறது.
ப்ரமிடின், நார்வே
1910ம் ஆண்டு கட்டப்பட்ட ப்ரெமிடின் 1000 மக்கள் எண்ணிக்கையுடன் சிறு சுரங்க நகரமாக இருந்துள்ளது. பின்னர் இந்நகரத்தை ரஷ்யா வாங்கிய பின் பெரும நில கரி சுரங்க நகரமாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக