புளுபெர்ரி என்று அழைக்கப்படும் அவுரிநெல்லி பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது.
இதன் பூக்கள் மணி வடிவத்தில் வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இதோ இதன் மருத்துவ பயன்கள்,
நோய் எதிர்ப்பு சக்தி
இயற்கையின் கொடையில் மிகச்சிறந்த உணவாக கருதப்படும் புளுபெர்ரி, மற்ற பழங்கள், காய்கறிகளை விட அதிக அளவு ஆண்டியாக்ஸிடண்ட்களை கொண்டுள்ளது என்று ஆய்வுகளின் முடிவில் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழம் நீலநிறமாவதற்கு தேவையான ஆண்டியாக்ஸிடன்ட்களை அதிகளவு கொண்டுள்ளது.
மேலும், இதில் பைபர் மற்றும் வைட்டமின் சி ஊட்டசத்துகள் நிறைந்துள்ளது. இது இதயத்தில் உண்டாககூடிய நோய்களை தடுக்கிறது.
வயிற்று கொழுப்பை குறைக்க
நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழமானது எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது.
உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் புளுபெர்ரி பழங்களை சாப்பிடலாம்.
இப்பழத்தை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள கொழுப்புகளை அகற்றி உடலை பாதுகாக்கிது. சிலர் தொப்பையை குறைக்க முடிவதில்லை என கவலைப்படுவது உண்டு. அவர்கள் உலர்ந்த புளுபெர்ரியை சாப்பிட்டு தொப்பைக்கு டாடா காட்டிவிடலாம்.
ஏனெனில் இப்பழத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி சிக்கென்று உடலை வைத்துக்கொள்ள உதவி புரிகிறது.
உயர் இரத்த அழுத்தம் தடுக்க
நீல மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் பழங்கள் அனைத்திலும் அந்தோசியனின்கள் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிராக இந்த நிறமிகள் போராடி உடல் நலத்தை பாதுகாக்கிறது.
மூளை பராமரிப்பு
புளுபெர்ரி பழத்தில் உள்ள அந்தோசியனின்கள் மூளையின் நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து தொடர்புகளையும் இணைத்து அதிகரிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
புளுபெர்ரி பழச்சாற்றை வயதானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளவதால் அவர்களது ஞாபகசக்தி மாறுபடுகிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக