தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

ஆகஸ்ட் மாத நிகழ்வுகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்தியாவில் நடைபெற்ற சம்பவங்கள் ஒரு பார்வை,
மோடி, ஜெயலலிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய இலங்கை
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், தமிழக மீனவர் பிரச்சினை குறித்து மோடிக்கு, ஜெயலலிதா எழுதிவரும் கடிதங்கள் குறித்து சர்ச்சைக்குரியஒரு கட்டுரை பதிவேற்றப்பட்டிருந்தது.
தங்கசட்டையை வாங்கிய தொழிலதிபர்
மும்பையில் உள்ள இயோலா நகரைச் சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் பங்கஜ் பாரக், தங்கத்தின் மீது தணியாத ஆசையால் தனது பிறந்த நாளுக்காக ரூ.1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சட்டையை வாங்கியுள்ளார்.
5 பிரபல தொழிலதிபர்கள்
இந்தியாவில் உள்ள அனைவரின் மொத்த சொத்தின் பாதியளவு, 5 கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கோட்டையில் முதல் முறை கொடியேற்றிய மோடி
இந்தியாவின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றியுள்ளார்.
தமிழில் பிரசாரம் செய்யும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வலைத்தளங்களில் வெளியான பிரசார காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ரகசிய முதலீடு செய்யும் ராஜபக்சே?
சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் ஒருவர் ஐந்து நட்சத்திர ஹொட்டல் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தந்தைக்காக 5 இளைஞர்களை துவம்சம் செய்த இளம்பெண்
உத்தரபிரதேசத்தில் 16 வயது இளம் பெண் ஒருவர் தனது தந்தையை காப்பாற்ற 5 இளைஞர்களை எதிர்த்து நின்று போராடி அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நலமுடன் வாழும் சென்னை
இந்தியாவிலேயே மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான, மதராஸப்பட்டணம் என்று அக்காலத்தில் பரவலாக அறியப்பட்டு வந்த சென்னை  நகரத்தின் 375 ஆண்டுகள் பழமையான பெருமையை நினைவுகூரும் வகையில் சென்னை தினம் (மெட்ராஸ் டே) கொண்டாடப்பட்டது.
ரைஸ் பக்கெட் சவாலுக்கு ரெடியா?
உலகளவில் இணையத்தில் தீயாய் பரவி வந்த ஐஸ் பக்கெட் சவாலைப் போன்றே தற்போது சில நாட்களாக இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த மஞ்சு லதா என்ற பெண்மணி தொடங்கிய ரைஸ் பக்கெட் சவால் என்ற ஒன்று பரவத் தொடங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக