தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 11 செப்டம்பர், 2014

வல்லாரையின் மருத்துவ பலன்கள்!

தரையில் படர்ந்து வளரும் இயல்புடைய வல்லாரை “மூளைக்கான உணவு” என அழைக்கப்படுகிறது.
இதில் வைட்டமின் சி, ஓலிகோசேக்ரைட், லெப்ரெசி நோயை குணப்படுத்தும் மருந்தான அசியாடிகோசைட் உள்ளிட்டவை உள்ளன.
நினைவாற்றலை அதிகரிப்பதுடன், பாக்டீரியாக்களை அழிக்கும்.
* வல்லாரை கீரை ஒருபிடி, துளசி இலைகள் ஒரு பிடி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இதை அரை கப் வீதம் தினமும் 3 வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும். இதனுடன் நல்லமிளகும் சேர்க்கலாம்.
* சிறுநீர் பையில் புண்கள், சிறுநீர் செல்லும் போது வலி உள்ளவர்கள் வல்லாரையை சாறு பிழிந்து 3 ஸ்பூன் சாறுடன், தேன் கலந்து தினமும் 3 நேரம் அருந்தலாம். ஒரு வாரம் இது போல் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.
* பாலில் வல்லாரையை நசுக்கி போட்டு காய்த்து தினமும் இரவு தூங்கும் முன்பு பருக வேண்டும். இது போன்று 3 வாரங்கள் செய்ய வேண்டும்.
* 5 கிராம் வல்லாரை பொடியை பாலில் கலந்து தினமும் இரண்டு நேரம் குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
* தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும், திக்குவாய் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக