தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

இப்படியும் ஒரு ஆல்பமா? பார்த்து மிரண்டு போய்டாதீங்க


பிரபல டச் நாட்டு புகைப்படக்காரான நிகி பெஜின் உலகம் முழுவதும் உள்ள பழமையான கட்டிடங்களின் புகைப்படங்களை வெளியிட உள்ளார்.
கடந்த ஆண்டு பெஜின் வெளியிட்டுள்ள புத்தகமான DISCIPLE OF DECAY பெரும் பிரபலம் அடைந்தது.
இந்நிலையில் தற்போது தனது FROZEN என்ற புகைப்பட புத்தகத்தை வெளியிட தயாராகியுள்ளார்.
இவரின் புத்தகம் வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதி ஜேர்மனி தலைநகரான பெர்லினில் 174 பக்கங்களுடன் வெளியிட உள்ளார்.
இந்த புத்தகத்திற்காக பாழடைந்த தேவாலயங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் என அனைத்தையும் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதற்காக ஐரோப்பியாவின் போலாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்பட 8 நாடுகளை சுற்றி, அரிய புகைப்படங்களை எடுத்துள்ளார்.
அனைத்து இடங்களும் ஆபத்தானவை என்றாலும், கூகுள் எர்த் மூலம் இடங்களை கண்டறிந்து மிக தைரியமாக புகைப்படங்களை எடுத்துள்ளார்.
மேலும் தனது வீட்டின் அருகில் உள்ள பாழடைந்த வீட்டை பார்த்து பிறகு தான், தனக்கு இது போன்ற விடயம் மனதில் தோன்றியதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக