தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 செப்டம்பர், 2014

காரமான மிளகின் அற்புதமான நன்மைகள்!

உணவில் காரத்தை கொடுக்கும் மிளகாய் வகையின் ஆதாரமாக இருப்பது மிளகுகளாகும்.
மிளகுத் தூளை சூடாக சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன என்பது உண்மை.
நார்ச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கலோரி குறைவாக உள்ள தாதுப்பொருட்களை கொண்டிருக்கும் மிளகு, எடை குறைப்புக்கு அவசியம் பயன்படுத்த வேண்டிய சைவ உணவாகும்.
கோஸ்ட் பெப்பர்களைப் போல, மிளகை சூடாக வறுத்து சாப்பிட்டால், அது எடை குறைப்பு முயற்சியை ஊக்குவிப்பதாக இருக்கும்.
ஏனெனில், உடலின் செயலூக்கத்தை மேம்படுத்தவும் மற்றும் குறைவான உணவை சாப்பிட்டு, கொழுப்பை எரிக்கவும் இது உதவும்.
இப்போது மிளகாய் வகைகளின் ஆரோக்கிய நன்மைகளை பார்ப்போம்,
* சைனஸ் திறமையான பாக்டீரியா எதிர்ப்பு குணத்தையும் மற்றும் நீண்ட காலத்திற்கு சைனஸ் (Sinusitis) வருவதை தவிர்க்கும் குணத்தையும் கேப்சைசின் பெற்றுள்ளது.
இது ஒரு சுத்தமான மற்றும் இயற்கையான வேதிப்பொருளாக இருப்பதால், நாசித் துவாரங்களின் அடைப்புகளை சுத்தம் செய்யவும் மற்றும் சைனஸ் தொடர்பான அலர்ஜிகளையும் சமாளிக்க உதவும்.
கேப்சைசினை (Capsaicin) தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பை நீண்ட நாட்களுக்கு தவிர்த்திட முடியும்.
* மிளகில் உள்ள கேப்சாய்சின் எரிச்சலுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்படும் குணத்தைக் கொண்டுள்ளது.
மேலும், காரமான மிளகில் வைட்டமின் சி-யும் நிரம்பியுள்ளது. எனவே, காரமான மிளகை வலியுள்ள மூட்டுகளிலும், திறந்திருக்கும் காயங்களிலும் மற்றும் இரத்த இழப்பை நிறுத்துவதற்கும் நேரடியாகப் பயன்படுத்தலாம்.
பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் பணியை மிளகு செய்வதால், எரிச்சல் மற்றும் வேதனையை குறைத்திட முடியும்.
* பல் வலி இருந்தால், கயென்னே மிளகை எடுத்து எண்ணெயில் போட்டு வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு பருத்தி துணியை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.
* பெப்டிக் அல்சர், டிஸ்பெப்ஸிய மற்றும் நியோரோபதிகளில் பல்வேறு நபர்களும் காரமான மிளகை பயன்படுத்துகிறார்கள்.
கேப்சைசினுக்கு ஒரு குறிப்பிட்ட வகையான குடல்களின் பிரச்சனைகளை சரிசெய்யும் குணம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
எரிச்சலூட்டும் குடல் நோய் (Inflammatory Bowel Disease) உண்டாக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நரம்பு செல் தேவையாக இருப்பதை டியூக் பல்கலைக்கழக குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
எரிச்சலின் காரணமாக அடிவயிற்றில் ஏற்படும் வலிகள், அசௌகரியங்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றின் ஒட்டுமொத்த பெயராக எரிச்சலூட்டும் குடல் நோய் உள்ளது.
* புற்றுநோய்க்கான செல்களை தானாக அழிந்து விடுமாறு தூண்டும் குணம் கேப்சைசினுக்கு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
புரோஸ்டேட் புற்றுநோய் செல்களில் சுமார் 80 சதவீதத்தையும், புரோஸ்டேட் புற்றுநோய் கட்டிகளையும் கேப்சைசின் கொண்டு குணப்படுத்த முடியும்.
* இரத்தம் உறைவதற்கு அவசியமாக தேவைப்படும் நார்களை நம்முடைய உடல் பிரிப்பதற்கும் கேப்சைசின் உதவுகிறது.
* அது மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள பல கலாச்சாரங்களில், மிளகை தங்களுடைய உணவில் சாதாரணமாக பயன்படுத்தி வருபவர்கள் யாருக்கும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரவில்லை என்பது உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக