விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு தோல் புற்றுநோய் அபாயம் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
மற்றவர்களை விட இவர்களுக்கு இந்த அபாயம் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெலனோமா என்ற இந்த தோல் புற்றுநோயானது சாதாரண மக்களை விட விமானிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும்தான் சீக்கிரமே தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக உயரத்தில் விமானம் பறக்கும்போது இவர்களுக்கு அயனி கதிர்வீச்சும் புற ஊதாக் கதிர்வீச்சும் அதிக அளவில் தாக்குவதால் இந்த அபாயம் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
9000 மீட்டர் உயரத்தில் பறக்கும் போது தரையில் இருப்பதை விட இரு மடங்கு அதிக அளவில் புற ஊதாக் கதிர்வீச்சு அளவு இருக்கும் என சான்பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிராயரும், ஆய்வுக் குழுத் தலைவருமான மார்ட்டினா சான்லோரென்சா கண்டுபிடித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக 2 லட்சத்து 66 ஆயிரம் பேரிடம் 19 விதமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் விமானிகளுக்கு 2.22 சதவீத அதிக அபாயமும், விமான ஊழியர்களுக்கு 2.09 சதவீத அபாயமும் உள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக