தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 மார்ச், 2015

குரங்கில் இருந்து மனிதன் ஏன் வேறுபடுகிறான்: விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள் !


சிம்பன்சி என்று அழைக்கப்படும் மனிதக் குரங்குகளில் இருந்து மனிதன் எவ்வாறு வேறுபடுகிறான். குரங்கில் பல வகைகள் உள்ளது. கொரில்லா, சாதாரண குரங்கு, சிம்பன்சி என்று பலவகைகள் உள்ளது. மேலும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் மனித மூளையே மிகவும் வளர்சியடைந்த மூளையாக உள்ளது. இது ஏன் ? எப்படி எமது மூளை மட்டும் இவ்வளவு வளர்சி கண்டது என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. உலகில் உள்ள சில ஜீவராசிகளால் குறைந்த பட்சம் சிரிக்க கூட முடியாத நிலை காணப்படுகிறது. ஆனால் மனிதன் எவ்வளவோ தூரம் முன்னேறி விட்டான். உலகில் மனிதனைப் போன்ற அமைப்பை உடைய ஜீவராசி மற்றும் இந்த ஜீவராசியில் இருந்து தான் மனிதன் வந்தான் என்று கூறுவது குரங்கை தான்.
அதிலும் சிம்பன்சி என்று அழைக்கப்படும் குரங்கு மட்டுமே மிகவும் புத்திசாலி ஆகும். அத்தோடு மனிதர்களுடையை DNA யை இவை கொண்டுள்ளது என்பது அடுத்த ஆச்சரியம் ஆகும். மேலும் மனிதனுடைய DNA மற்றும் சிம்பன்சியின் DNA இரண்டையும் ஒப்பிட்டால் 99% சதவீதம் அவை பொருந்துகிறது. அப்படி இருக்கையில் மனிதன் மூளை மட்டும் எவ்வாறு இப்படி அபரிவிதமாக முன்னேறியது என்பது தொடர்பாக விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ந்து வந்தார்கள். ஆனால் விடை கிடைக்கவில்லை. தற்போது ஜேர்மன் நாட்டு விஞ்ஞானிகள் இதற்கான விடையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். ARHGAP11B எனப்படும் ஒரு ஜீன் மனித மூளையில் காணப்படுகிறது. இது சிம்பன்சி குரங்கின் மூளையில் இல்லை.
மேலும் எந்த ஒரு ஜீவராசியின் மூளையில் இந்த ARHGAP11B ஜீன் காணப்படவில்லைஎன்கிறார்கள். எனவே இது தான் மனித மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதன் திறனை வைத்தே எமது இனத்தின் முன்னேற்றம் நிகழ்ந்து வருகிறது. மேலும் குறித்த ஜீன் மனித மூளையை 3 மடங்கு அதிகமாக வளரவைக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியம் ஆனால் உண்மை தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக