காலை 6.30 மணிக்கு கோபுரங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று 9.30 மணிக்கு மூல மூர்த்திக்கும் அதனை தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
மருதடி விநாயகர் ஆலயம் கடந்த 2004ம் ஆண்டு முதல் 10 வருடகாலமாக கருங்கல்லினால் புனருதாரனம் செய்யப்பட்டு வந்தது. ஆலய சிற்ப வேலைகளுக்கு இந்தியாவில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு கருங்கல்லில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. ஆலய புனருத்தாரன வேலைகளுக்காக 25 கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜகோபுரத்துக்கு அடிகல் நாட்டும் விழா!
மலையகத்தில் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்திற்கு இராஜகோபுரம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
பிரதம குருவாக பிரம்மஸ்ரீ வள்ளிக்காந்தன் குருக்கள் மற்றும் கிரியாஞானசாகரம் பிரம்மஸ்ரீ சந்திரானந்த குருக்கள் ஆகியோரின் தலைமையில் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதில் பிரதம அதிதியாக இந்தியா உதவி தூதுவர் திருமதி. ராதா வெங்கட்ராமன் உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
அத்தோடு இராஜகோபுர பூமி பூஜையும் சங்குஸ்தாபன பெருவிழாவும் நடைபெற்றது. காலை 108 வலம்புரி சங்கு பூஜை கணபதி ஹோமமும், அதனைதொடர்ந்து விசேட பூஜையும் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக