குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்புக்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியை தரும் WhatsApp ஆனது தற்போது மற்றுமொரு புதிய வசதியினை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, நண்பர்களுக்காக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை அவர்கள் படித்துவிட்டார்களா? எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஸ்மார்ட் கைப்பேசி அல்லது டேப்லட்டிலுள்ள WhatsApp அப்பிளிக்கேஷனில் நீல நிறத்திலான இரு சரி அடையாளங்கள் காணப்படுமாயின் உங்களால் அனுப்பப்ட்ட செய்தியினை உங்கள் நண்பர் படித்து விட்டார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் பார்வையிட்ட நேரத்தினையும் காட்டுகின்றது.
எனினும் குழு சட்டிங்கின்போது சரி அடையாளங்கள் மட்டும் நீல நிறமாக மாறும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக