தாட்பூட் என அழைக்கப்படும் பேஷன் ஃபுருட் என்ற பழம் மலைப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது.
தென் அமெரிக்காவை தாயமாக கொண்ட இந்த பழம் பேசி புளோரா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது.
இதில் நிறைந்துள்ளன ஏராளமான மருத்துவ குணங்களை இப்போது பார்ப்போம்
வைட்டமின் ஏ,பி மற்றும் சி என அனைத்தும் நிரம்பிய இந்த பழம் கண்களையும், சர்மத்தையும் பாதுகாக்க உதவும்
இப்பழங்கள் இரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாக செயல்படுகின்றது.
இந்த பழத்தின் ஜூஸ் அல்லது சாலடை போல் செய்து சாப்பிடுவதால் உடல் சக்தி அதிகரிக்கும்.
ஆஸ்துமாவை கட்டுப்படுத்தி சுவாச கோளாறுகளில் இருந்து விடுபட இந்த பழம் ஒரு சிறந்த மருந்து.
இப்பழத்தின் மூலம் தயாரிக்கப்படும் பேசியோ என்ற மதுபானத்தை அளவாக அருந்துவது உடல்நலத்திற்கு நல்லது.
இந்த பழத்தை சாப்பிடுவதால், உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கி, உணவை ஜீரணமடைய செய்வதிலும் உதவுகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கவும், நல்ல தூக்கத்தை பெறவும் தினமும் இப்பழத்தை எடுத்து கொள்ளலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக