தூக்கத்தின் பொழுது நம்மை அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம்.
தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.
உறக்கத்தின் பொழுது குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிது. தியானத்தில் ஈடுபடும் பொழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் செய்கிறது.
நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும்.
நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவோம். மேலும் பல சிகரங்களைத் தொடச்செய்யும்.
தியானம் என்பது ஒரு பயணம்.
தியானத்தின் பொழுது நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம். மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு, அறிவாற்றலிலிருந்து நமக்குள், பின்பு அதையும் தாண்டி "தியானம்" மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும்.
தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காலை 5 அல்லது 6 மணி. மாலை 6.30 அல்லது 7.30 மணி) முடிந்தவரை குறிப்பாக அந்த நேரத்திலேயே தியானம் செய்ய முயற்சி செய்யவும்.
* வீட்டில் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது அமைதியான இடமாக இருக்க வேண்டும்.
* அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.
* சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்த உதவும்.
* இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்து செல்லவும். அங்கு பன்னிரெண்டு இதழ்கள் கொண்ட சிவப்பு தாமரையை கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அதில் உயிருணர்வுடன் அமர்ந்திருப்பதை எண்ணவும்.
* இப்போது உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், ஆகியவற்றிற்காக பிராத்திக்கவும்.
* ஐந்து, பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.
* பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்யவும்.
* தியானத்திற்கு பிறகு உடனடியாக எழுந்திருக்க வேண்டாம். தொடர்ந்து சிறிது நேரம் அமர்ந்து மனதுக்கு அமைதி தரும் ஆன்மீக புத்தகங்களை படியுங்கள்.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 4 நவம்பர், 2014
ஆறாவது அறிவின் கதவை திறக்க வேண்டுமா? தியானம் செய்யுங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக