சுழற்சி முறையில் பணிபுரியும் நபர்களின் ஞாபகசக்தி மற்றும் மூளை திறன் மங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரான்சில் 3000 பேர் பங்கேற்ற இந்த ஆய்வின் முடிவில், சுழற்சி முறையில் பணிபுரிபவர்களின் மூளை திறனை விட தினமும் ஒரே முறையான நேரத்தில் பணிபுரியும் நபர்களின் ஞாபக சக்தி மற்றும் மூளை செயல்திறன் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் பணிபுரிபவர்களின் உடல்நிலையில் உண்ணும், உறங்கும் நேரங்கள் மாற்றமடைவதால் அவர்களுக்கு இதயம், மூளை சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். சில சமயங்களில் புற்றுநோய் பாதிப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆய்வின் ஒரு பகுதியாக, சுழற்சி முறையில் பணிபுரிபவர்களுக்கு நடத்தப்பட்ட அறிவாற்றல் வேகம் சார்ந்த சோதனையில் பலர் தேர்ச்சி அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டௌலோசி மற்றும் ஸ்வான்ஸி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகையில், முறையற்ற வேலைமாற்ற நேரங்களில் 10 ஆண்டுகாலமாக பணிபுரிபவர்களின் அறிவாற்றல் திறன் 6 1/2 ஆண்டுகள் பின்தங்கியதாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
காலை, மதியம், இரவு நேர சுழற்சி முறை வேலைமாற்ற நேரங்களில் பணிபுரியும் நபர்களுக்கு எவ்வாறு அறிவாற்றல் திறன் குறைகிறது என்பது குறித்த முழுமையான புரிதல் இல்லாத நிலையில், அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக