தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 8 நவம்பர், 2014

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயத் தவளை (படம் இணைப்பு)!


முள்ளந்தண்டு விலங்குகளில் விரைவாக அழிந்து செல்லக்கூடிய இனமாக தவளைகாணப்படுகிறது. இவ்வாறான இனம் தொடர்பில் உலகளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் சத்தியபாமா தாஸ் பிஜு குழுவினர் இந்திய மேற்கு பிரதேசங்களிலும் இலங்கையில் டொக்டர் மாதவ மீகஸ்கும்புர குழுவினர் இலங்கையின் மலையக பிரதேசங்களிலும் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் பல்வேறு வியத்தகு உண்மைகள் வெளிவந்துள்ளன.

இவ்விரு ஆராய்ச்சிகளினதும் முடிவு “Contribution to Zoology 2014” எனும் விஞ்ஞான சஞ்சிகையில் நான்காவது பாகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிகளில் இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான பேராசிரியர் பிஜு, சொனாலி கார்க், டொக்டர் ஸ்டேபன் மெஹோனி ஆகியோர்களும் இலங்கையின்பேராதெனிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த டொக்டர் நயன விஜயதிலக , கயனிஸ் செனவிரத்ன, டொக்டர் மாதவ மீகஸ்கும்புர ஆகியோரும் ஆராய்ச்சியாளர்கள் பங்குபற்றினர்.

இவ் ஆராய்ச்சிகளின் முடிவின் படி Ranidae எனும் தவளைக் குடும்பத்தின் Hylarana (நீர்த் தவளைகள்) எனும் இனப் பெயரைக் கொண்ட தவளை வகைககளை பற்றி விரிவானதொரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சிகளின் முடிவில்7 புதிய தவளை வகைகளை அவர்கள் கண்டறிந்து விஞ்ஞான ரீதியான பெயரிட்டு அதனை விவரித்துள்ளனர்.
இதில் ஆறு வகை தவளை இனங்கள் இந்தியாவின் மேற்கு பிரதேசங்களிலும் ஒரு வகை இலங்கை மழைக் காடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தவளை வகைகளில் வெளித்தோற்றத்திலும் நிறத்திலும் பாரியளவு வேறுபாடுகள் இல்லாதிருந்த காரணத்தினால் இது போன்ற பல்வேறு வகையான தவளை இனங்களை வேறுபடுத்த முடியாது போனது. அதன் காரணமாகவே தவளை வகைகளை செவ்வனே பிரித்தறிய மரபணு பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை ஆராய்ச்சிகளில் முக்கிய திருப்பமாகும்.

இந்த ஆராய்ச்சிக்கு முன்னர் இலங்கையில் Hylaranaவகையான 3 தவளை இனங்கள் காணப்பட்டதாக கருதப்பட்டது. அதில் ஒரு வகை Hylarana gracilis (இலங்கை நீர்த் தவளை) எனும் வகையான தவளைகள் இலங்கைக்கே உரித்தான வகையாகும். இன்னொரு வகை Hylarana temporalis (இலங்கை செம்பு நிற நீர்த் தவளை) எனும் வகை முதலில் இலங்கைக்கே உரித்தானது எனக் கருதப்பட்டாலும் பின்னர் இந்தியாவின் மேற்கு பிரதேசங்களிலும் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அடுத்த வகை Hylarana aurantiaca எனும் வகையாகும். இவ்வகை இந்தியாவின் திருவனந்தபுரத்தில் கண்டறியப்பட்டாலும் பின்னர் இலங்கையிலும் பதிவுசெய்யப்பட்ட ஒரு வகையாகும்.

பேராசிரியர் பிஜு குழுவினரின் ஆராய்ச்சியினால் இலங்கையில் விவரிக்கப்பட்டHylarana temporalis எனும் வகை இலங்கைக்கு மட்டுமே உரித்தானது என உரிமை கோரினர். அதே போல Hylarana aurantiaca இலங்கையில் இருந்ததாக கருதப்பட்ட இனத்தை புதியதொரு தவளை இனமாக Hylarana serendipi (இலங்கையின் பொன்னிற நீர்த் தவளை) என்று பெயரிட்டு விவரிக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் பின்பு இலங்கையில் மொத்தமாக 119 ஈரூடகவாழிகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 105 வகைகள் இலங்கைக்கு மட்டுமே உரித்தானதாக அறியப்படுகிறது.
08 Nov 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக