தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

திருமணம் செய்யப்போகும் ஆண்மகனே ஒருநிமிடம்!


திருமணம்_செய்யப்போகும்_ஆண்மகனே_ஒருநிமிடம்💕
💕படியுங்கள்💕
💕பள்ளியறையில் மட்டுமல்ல சமயலறையிலும் துணை கொடுங்கள்
💕மாதத்தில் மூன்று நாட்கள்மனைவிக்கு தாயாகு. மற்றைய நாளெல்லாம் சேயாகுங்கள்
💕அவள் ஆடைகளைசலவை செய்வது அவமானம் அல்ல.நீ வழங்கும் சமாதானம்.
💕இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடுங்கள்.
💕இயலாத நிலையிலே அவள் இருந்திடக் கண்டாலே உறவுதனைத் தவிர்த்திடுங்கள்.
💕உப்பு கூடினாலும் தப்பு சொல்லி ஏசாதே.உதட்டு சுழிப்பை தவிர்த்து நீயும் அதை ருசிக்க தவறாதே.
💕சின்னச் சின்ன சண்டைகள் தினம்தோறும் போட்டுக்கொள், சினம்கூடி பெரும்சண்டை வந்திடாமல் பார்த்துக்கொள்.
💕அவள் கர்ப்பம் சுமக்கையில்நீ அவளை சுமந்திடு. அவள் வேலையில் அரைவாசி உன் கையில் எடுத்திடு.
💕சிலநாளில் காலைவரை அவள் அழகாய் தூங்கட்டும், அவள் படுக்கை அறை சென்றுஉன்கை தேநீர் வழங்கட்டும்.
💕உறவது முடிந்த பின்னேஉன்பாட்டில் தூங்காதே, உன்னவள் உன் மார்பில் தூங்க‌ ஓரிடம் கொடுக்க தவறாதே.
💕தமதித்து வீடு வந்தால் தகுந்த காரணம் சொல். தப்பு உன்னில் இருந்தாலே மன்னிப்பு கேட்டுக்கொள்.
💕வேலைக்குச் செல்லும்போதும், வேலைவிட்டு வந்தபோதும், புன்னகை சேர்ந்த முத்தத்தை பூவையவளுக்கு போட்டுவிடு.
💕சிறப்பான நிகழ்ச்சி எதற்கும் அழகாய் அவளை கூட்டிச்செல், எடுப்பான பெண்ணைக் கண்டால் எட்டி நீயும் நின்றுகொள்.
💕நோயிலே அவள் வீழ்ந்தால் பாயாகி விடு.நோவொன்று அவள் கண்டால் தாயாகி விடு. உன்னாலே அவள் வடிக்கின்ற கண்ணீர் ஆனந்தக் கண்ணீராய் இருக்கட்டும்.
💕ஆத்திரம் கூடினால் அழுது தொலைத்துவிடு. அவளை அடிக்கும் பழக்கமதை அறவே வெறுத்துவிடு.
💕நேரம் வரும் போதெல்லாம் வெளியே அழைத்துச்செல். வேதனை அவள் கொள்ளாமல் விருப்பங்களினை ஏந்திக்கொள்.
💕அவளொரு குற்றம் செய்தால் அணைத்து புரியவை. அன்னையாக நீ மாறிஅவளை திருந்தவை.
💕அவளின் நட்புகளை அவள் தொடர அனுமதி. அவளுக்கும் மனசிருப்பதை உன் மனம்புரிந்தால் பெறுமதி.
💕தலை நரைக்கும் காலத்திலும்சேர்ந்தே உறங்கிவிடு. சாகப்போகும் நேரத்திலும் அவள்கை பிடித்துவிடு.
💕
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக