தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, January 20, 2017

பூமியில் சிக்கிய பறக்கும் சித்திர குள்ளர்கள்.! வியப்பில் விஞ்ஞானிகள்

புராணக்கதைகளில் சித்திர குள்ளர்கள் பறக்கும் மனிதர்கள், வித்தியாசமான உடலமைப்பு கொண்ட உயிரினங்கள் என பல்வேறு வகையாக உயிரினங்களைப் பற்றி கூறியிருக்கின்றன.
அந்த வகையில் தேவதைகள் என புராணங்கள் வர்ணித்தவை வெறும் கற்பனையா அல்லது நிஜத்தின் பதிவா என்ற கேள்வி நிச்சயம் எழக் கூடும்.
காரணம் கற்பனைக்கு எட்டாத வகையில் புராணக் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவ்வாறான உயிரினங்கள் கண் முன் தோன்றினால்??
ஆம் இது நடக்கக் கூடும் எனவும் அவ்வாறான உயிரினங்கள் பூமிக்கு சொந்தமில்லாதவை. ஆனாலும் இப்போதும் அவை பூமியில் காணப்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஆதாரமும் கிடைத்துள்ளது புராண கதைகளில் கூறப்பட்ட பறக்கும் தேவதைகளைப் போன்ற வடிவம் கொண்ட உடல்கள் கிடைத்துள்ளன.
இதனைவைத்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அவை வேற்று உலகத்தை சேர்ந்தவைகள் என அடித்துக் கூறுகின்றனர். அத்தோடு பூமியின் சூழலுக்கும் ஏற்ப வாழும் உயிரினங்களே இவை என்பதனையும் கண்டு பிடித்தனர்.
ஆனாலும் அவை எப்படி பூமிக்கு வந்தன? யார் கொண்டு வந்தது அல்லது தானாக பூமிக்கு வருகின்றதா? அப்படி என்றால் அதற்கான பாதை எங்குள்ளது என்ற பல கேள்விகள் பிறந்தன.
இந்தக் கேள்விகளுக்கு விடை கூறமுடியாத விஞ்ஞானிகள் மர்மமாக மறைத்து விடுகின்றனர்.
அந்த வகையில் உருவான தேடலுக்கு பதிலாகவே கருந்துளைகளை கூறிய விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தில் காணப்படும் கருந்துளைகள் மூலமாகவே இரு உலகங்களை இணைக்கும் பாதை உருவாவதாக கூறினர்.
உலகின் தலை சிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங்கும் கூட இதனை ஒத்துக் கொண்டுள்ளதோடு, பூமி முழுவதும் இவ்வாறான பிரபஞ்சங்களை இணைக்கும் கருந்துளைகள் காணப்படுகின்றன எனவும் கூறியுள்ளார்.
ஆனாலும் அவை எப்போது எங்கே உருவாகும் என்பது எவராலும் கண்டு பிடிக்க கணிக்க முடியாத காரணத்தினாலேயே புதிராக உள்ளது என்றும் அவற்றை செயற்கையாக உருவாக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் படி இவ்வாறான விசித்திர உயிரினங்கள் வேறு உலகத்தில் இருந்து பூமிக்கு வந்து செல்கின்றன. வந்த பாதை மறைந்து போகவே அவை பூமியில் மறைந்து வாழ முயற்சி செய்கின்றன எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இப்போது அதிகரித்துள்ள பிரபஞ்ச தேடல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையின் கூடிய விரையில் இன்னுமோர் உலகத்தோடு பூமி இணையும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment