தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 ஜனவரி, 2017

தமிழ் மொழி மூலமான கற்கை நெறிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்திற்கு 2 மில்லியன் டொலர் அன்பளிப்பு செய்த ஈழத் தமிழர்..

கனடாவில் அமைந்துள்ள ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்திற்கு ஈழத்தமிழர் ஒருவரால் இரண்டு மில்லியன் டொலர் நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மூலமான கற்கை நெறிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான, கலாநிதி ரவி குகதாசன் என்ற ஈழத்தமிழரே இந்த நிதி அன்பளிப்பை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நிதியினைக் கொண்டு தமிழ் மொழி மூலமான பாட கற்கை நெறிகளை விரிவு படுத்த முடியும் எனவும், ஈழத்தமிழர்களின் கலை, கலாச்சாரம் உள்ளிட்ட விடயங்கள் ஏனைய சமூகத்தவர்களுக்கு எடுத்து காட்ட முடியும் எனவும் அந்த பல்கலைக்கழகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
1974ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தை விட்டு வெளியேறிய கலாநிதி ரவி குகதாசன் கனடா நாட்டில் குடியேறிய பின்னர், 1978ஆம் ஆண்டில் ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் இணைந்துகொண்டார்.
1982ஆம் ஆண்டில் ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் Bsc பட்டம் பெற்ற அவர், 1986ஆம் ஆண்டில் ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, 51 ஆண்டுகால வரலாற்றில் பல்கலைக்கழகத்திற்கு தனி நபர் ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்ற மிக பெரிய அன்பளிப்பு இதுவே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக