தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 ஜனவரி, 2017

வரலாற்றில் புதைந்துபோன அசோக வனம்...! மறைந்திருக்கும் மர்மம் என்ன..?

இலங்கை நாட்டுக்கென பிரசித்திப் பெற்ற எத்தனையோ சுற்றுலாத்தளங்கள் உள்ளன. ஒரு சில சுற்றுலாத்தளங்களில் அழகோடு சேர்த்து சில மர்மங்களும் புதைந்திருக்கும்.
அவற்றுள் ஒரு சிலவே வெளி வருகின்றன. பல உலகுக்கு வெளிவராமல் புதைந்து விடுகின்றன அப்படி புதைந்துப் போன ஒரு வரலாற்று இடம்தான் அசோக வனம்.
இராமாயணம் இதிகாசம் கூறும் பழம் பெரும் வனமாகிய அசோக வனம் நுவரெலியாவின் சீதா- எலிய எனும் இடத்தில் அமைந்துள்ளது.
எம்மில் பலருக்கு சீதை சிறை வைக்கப்பட்ட இடமாக மட்டுமே அசோக வனம் தெரியும். ஆனால் அசோக வனம் அதிசயங்களோடு சேர்த்து சில நம்ப முடியாத ஆச்சரியங்களையும் மர்மங்களையும் தன்னகத்தே புதைத்து வைத்திருக்கின்றது.
இராவணன் சீதையை சிறை வைத்த இடத்தில்தான் தற்போதைய சீதையம்மன் ஆலயம் அமையப் பெற்றிருக்கிறது என்பது  மட்டும் தான் அனைவருக்கும் தெரிந்த விடயம், ஆனால் சீதை சிறை வைக்கப்பட்ட இடத்தில் தற்போதைய ஆலயம் எழுப்பப்படவில்லை என்ற  உண்மை எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆம்! இராவணன் சீதையை கடத்தி வந்த வேளையில் அழகான மாட மாளிகைகள் சூழப்பட்டிருந்த அசோக வனத்தின் மையப்பகுதியிலேயே சிறை வைத்திருக்கின்றான். அதனை சித்தரிப்பதாகவே கம்பரின் இராமாயணமும் அமைந்திருக்கின்றது
ஆனால் பிற்காலத்தில் அனைத்து மக்களுக்கும் சீதை சிறை வைக்கப்பட்ட இடம் என தற்போதைய சீதையம்மன் ஆலயம் அமைந்துள்ள இடமே சுட்டி காட்டப்பட்டிருக்கின்றது.
நாம் கூட சீதாப்பிராட்டியார் அடர்ந்த வனத்தினுள் சிறை வைக்கப்பட்டதாகவே படித்திருப்போம், கேள்வியுற்றிருப்போம்.
அப்படி அடர்ந்த வனத்தினுள் சீதை சிறை வைக்கப்பட்டிருந்தால் வனத்திற்கு வெளியில் எதற்கு கோவில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதுவே சீதை சிறை வைக்கப்பட்ட இடமென தற்போதைய ஆலயத்தினை மட்டும் சுட்டிக் காட்டி எம்மை தொடர்ந்தும் எமாற்றிக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன? இது தொடர்பில் அறிந்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
இவ்விடயம் தொடர்பில் பல காலத்திற்கு முன்பே ஆராய்ச்சியாளர்களால் பல கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
அவர்கள் அசோக வனத்திற்குள் விஜயம் செய்த போது பல விநோதங்களையும் பார்வையிட்டுள்ளனர். அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள ஆதாரங்களே இவை...!
உண்மையில் இராவணன் சீதையை சிறை வைத்தது வனத்தின் மையப்பகுதியிலே ஆகும். காரணம் அடர்ந்த வனத்திற்குள் பிரவேசிக்கும் போது இராவணனின் மாட மாளிகைகளின் இடி பாடுகள் காணப்படுகின்றன.
வனத்தின் இடை நடுவில் பாரிய பூந்தோட்டம் ஒன்று காணப்பட்டதற்கான தடயங்கள் காணப்படுவதாகவும் அதன் வழியே சென்றால் மாத்திரமே சீதை சிறை வைக்கப்பட்ட உண்மையான இடத்தினை அறிந்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் சீதை சிறை வைக்கப்பட்ட இடமாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படும் வனத்தின் மையப்பகுதியிலே பாரிய மரமொன்று காணப்படுவது தெரிந்தாலும் அதனை நெருங்க விடாமல் பல உயிரினங்கள் இடையூறு விளைவிக்கின்றன.
நேரம் கடக்கும் போது வினோதமான ஒலிகளும், வினோதங்களும் இடம் பெறுகின்றன.
காட்டிற்குள் மனிதர்கள் இறந்ததற்கான தடயங்களும் காணப்படுகின்றன. எனவும் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் சீதை சிறை வைக்கப்பட்டதாக கூறப்படும் பிரதேசத்திற்கு செல்வது கடினம் என்றும் மீறி சென்றாலும் உயிர் பிழைக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அப்படியானால் அங்கு நடப்பது என்ன? இன்று வரை மக்கள் வனத்தை பார்வையிடுவதற்கோ உட் செல்வதற்கோ அனுமதிக்கப்படாதது ஏன்?
விடை காண முடியா விநோதங்கள்....
அனுமன் தீயிட்டு கொழுத்தியதாக கூறப்படும் வனப்பகுதி இன்று வரை அதே எரிந்துப் போன அடையாளங்களுடன் கருகிய நிலையிலேயே காணப்படுகின்றது.
சீதாபிராட்டியார் குளித்ததாக கூறப்படும் நதியானது இன்று வரை வற்றாமல் ஒடிக் கொண்டிருக்கின்றது.
சீதாதேவி கண்ணீர் வடித்தாக கூறப்படும் இடம் பள்ளமாகி நீர் நிரம்பி காணப்படுகின்றது. ஆய்வாளர்கள் கூட இதனை ஆராய்ச்சியில் உண்மை என்றே கூறியிருக்கிறார்கள்.
அனுமன் நடந்ததாக கூறப்படும் இடங்களில் இன்றும் அழியாமல் பாத சுவடுகள் காணப்படுகின்றன.
வனத்தினுள் பல ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும் கருங்குளவிகள் என சொல்லப்படும் பூச்சி இனங்கள் வாழ்கின்றன. எனவும் கூறப்படுகின்றது.
அனுமனின் கைப்பட்டதனால் சிவப்பு நிறமாகியது எனக் கூறப்படும் வெள்ளை நிறப்பூக்களும் வாடாமல் பூத்து குலுங்கி கொண்டிருக்கின்றன.
இது போல் பல்வேறு இரகசியங்களை தன்னகத்தே புதைத்து வைத்திருக்கின்றது அசோக வனம்.
மொத்ததில் சீதையம்மனுக்கான ஆலயம் சீதாப்பிராட்டியார் சிறை வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்படவில்லை. ஏன் என்று ஆராய்ச்சியாளர்களாலும் விடைகாண முடியாத பிரதேசமாக இன்று வரை மிளிர்கின்றது.
எதிர் காலத்திலாவது இது தொடர்பான உண்மை வெளிவருமா அசோக வனத்தின் முழுமையான இரகசியங்கள் வெளிச்சம் பெறுமா என்பதும் கேள்விக்குறியே?
இராவணன் சிறை வைத்தது சீதையை மட்டுமல்ல அசோக வனத்தையும் சேர்த்துதான் என்பதை இதனூடாக நாம் அறிந்துக் கொள்ள முடியும்.
கிடைக்காமல் போன விடைகளுக்காய் இறுதி வரை காத்திருப்போம் இது தொடர்பான உண்மைகளும் என்றாவது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக