தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 ஜனவரி, 2017

நீங்கள் எப்படி என்பதை உங்கள் முகத்தின் வடிவமே சொல்லிவிடும் தெரியுமா?

ஒருவருடைய குணங்கள், ஆளுமை திறன் ஆகியவற்றை பற்றி தெரிந்துக் கொள்ள அவர்களின் ராசி நட்சத்திரம், பிறந்த தேதி மற்றும் நேரம், சாமுத்திரிகா லட்சணம், உடலமைப்பு இது போன்ற பல விஷயங்கள் தேவைப்படும்.
அதில் ஒன்று தான் ஒருவருடைய முகத்தின் வடிவத்தை வைத்து, அவர் எப்படி பட்டவர்கள் என்பதை கணிக்க முடியும்.
இதய வடிவ முகம்
இதய வடிவிலான முகத்தை கொண்டவர்கள், உயர்ந்த சிந்தனைகள், நேர்மை தவறாத நல்லொழுக்கம், தாய்மை உள்ளம் மற்றும் காதல் உணர்வு போன்ற குணங்களை கொண்டவர்களாக விளங்குவார்கள்.
இதனால் அவர்களுக்கு எப்போதும் பணப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
நீள்வட்டம் வடிவ முகம்
முட்டை போன்று நீள்வட்ட வடிவத்தில் முகத்தை கொண்டவர்கள், அழகு, மென்மை தன்மை, புத்திசாலி போன்ற குணங்களை கொண்டவராக இருப்பார்கள். இதனால் இவர்கள் நடைமுறைக்கு ஏற்றவராகவும், ராஜதந்திர குணங்களுடனும் இருப்பார்கள்.
மேலும் இவர்களுக்கு பலருடைய உதவிகள் அதிகமாக கிடைக்கும். ஒவ்வொரு தருணத்தையும் சந்தோஷமானதாக இவர்கள் கருதுவார்கள்.
வட்ட வடிவ முகம்
வட்ட வடிவிலான முகத்தை கொண்டவர்கள், பிறரிடம் மென்மையாக சுலபத்தில் பழகும் தன்மை கொண்டவர்கள். அழகிய மற்றும் இளமையான தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.
மேலும் இவர்கள் அதிக அக்கறை, உணர்ச்சி, நேர்மை, தோழமை, லட்சியம் ஆகிய பண்புகளை அதிகம் கொண்டவராக இருப்பார்கள்.
சதுர வடிவ முகம்
சதுர வடிவத்தில் முகத்தை கொண்டவர்கள், முரட்டுத்தனமாக, லட்சியம் மிக்கவர்களாக, ஆளுமையுடன், தனது செயல்பாட்டில் திறமையாக முடிவு செய்பவராக இருப்பார்கள்.
மேலும் இவர்கள் அதிக கோபம், பிடிவாதம் கொண்டு உடல் ரீதியாக திடமாக இருக்கும் இவர்கள், மன அளவிலும் உறுதியுடன் இருப்பார்கள். இதனால் அவர்களை அவ்வளவு சுலபத்தில் வளைத்து விட முடியாது.
தலைகீழ் முக்கோண வடிவ முகம்
தலைகீழ் முக்கோண வடிவத்தில் முகத்தை கொண்டவர்கள், சுறுசுறுப்புடன், ஆற்றல் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் சகிக்கும் ஆற்றல் குறைவாக இருப்பதால் எளிதில் சோர்வடைந்து விடுவார்கள்.
மேலும் இவர்களின் முகத்தில் கலையாற்றல், நம்பிக்கை, படைப்பு, கற்பனை, உணர்ச்சி போன்றவைகள் தென்படுவதால், இவர்களுக்கு கலை உலகில் அதிக வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.
நீண்ட வடிவ முகம்
நீண்ட வடிவிலான முகத்தை கொண்டவர்கள், அறிவாளியாகவும், புத்திசாலியாகவும், நல்ல ரசனையுடனும் இருப்பார்கள்.
சமுதாய திறன்களை கொண்ட இவர்களின் உடல் கட்டமைப்பு அருமையாக இருக்கும். தன்னை தானே விரும்புபவர்களாக இருக்கும் இவர்கள் பிறர் உறவில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
நீண்ட மற்றும் ஒல்லியான முகத்தை கொண்டவர்களுக்கு சகிப்புத்தன்மை அதிகமாக இருக்கும். இவ்வகை முகத்தை கொண்டவர்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் விளங்குவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக