இலங்கையர்களின் உணவில் அதிகம் இடம்பிடிப்பது தேங்காய் பால் தான், இது நல்லதா என்று உங்களுக்கு தெரியுமா?
தேங்காயை அதிகளவு பயன்படுத்துவதற்கு காரணம் அதன் மருத்துவ பலன்கள் தான்.
ஒரு கப் தேங்காய் பாலில் உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புசத்தில் இருந்து 25 சதவீதம் கிடைக்கிறது.
தேங்காயில் வளமான அளவு மாங்கனீசு இருப்பதால் மாங்கனீசு குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இதில் நிறைந்துள்ள பாஸ்பரஸ், உடலில் உள்ள எலும்புகளை வலுவாக்குகிறது.
மேலும் தசைபிடிப்பு மற்றும் தசை வலியின் போது உணவுடன் சேர்த்து தேங்காய் பாலையும் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் எடையை குறைக்க முற்படுபவர்களுக்கு, கண்டிப்பாக இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான்.
தேங்காய் பாலில் செலினியம் அதிகம் உள்ளது, கீல்வாதம் இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
குறிப்பாக தேங்காய் பாலில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் சளி, இருமல் அண்டாமல் பாதுகாக்கிறது.
மேலும் விட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஜிங்க் சத்துக்கள் நிறைந்துள்ளது.
இப்போது புரிகிறதா நம் முன்னோர்கள் ஏன் தேங்காயை அதிகம் உபயோகப்படுத்தினர் என்று!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக