தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவது எதற்காக உங்களுக்கு தெரியுமா?

அரைஞாண் கயிறு என்பது நம்முடைய சிறிய வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒருவகை கருப்பு கயிறு ஆகும்.
இந்த கயிற்றை ஏன் போட வேண்டும் என்று கேட்டால் அதற்கு பெரியவர்கள் சொல்லும் பதில், இதை அணிந்து கொண்டால் திருஷ்டி படாது என்று கூறுவார்கள்.
அரைஞாண் கயிறு கட்டுவது ஏன்?
அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது. நம்மை விஷம் கொண்ட பூச்சிகள் மற்றும் பாம்பு போன்றவை தீண்டி விட்டால் அந்த விஷம் நமது கடிவாய் மற்றும் இதயத்திற்கு செல்லாமல் தடுப்பதற்கு, அரைஞாண் கயிறு பயன்படுகிறது.
எப்படியெனில் நமது கையினால், அரைஞாண் கயிற்றை அறுத்தெடுத்து அவசர உதவியாக இறுக்கிக் கட்டும் ஒரு தற்பாதுகாப்புக்காக பயன்படுகிறது.
ஆண்கள் தான் பெண்களை விட இந்த அரைஞாண் கயிற்றை தங்களின் இடுப்பில் அதிகமாக கட்டுவார்கள். ஏனெனில் ஆண்களை மட்டும் பாதிக்கு குடல் இறக்க நோய் வராமல் அந்த அரைஞாண் கயிறு தடுக்கிறது.
இதனால் தான் பெண்களை விட ஆண்கள் அதிகமாக அரைஞாண் கயிற்றை கட்டும் பழக்கம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக