பசறை - தம்பலவெல கிராமத்தில் பழைமையான மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இயற்கை வளங்களை சீரழிக்கும் வகையில் பல்வேறு தரப்பினர் ஈடுபட்டு வரும் நிலையில், மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் தம்பலவெல கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
100 வருடங்கள் பழைமையான மரங்களை இந்த கிராமத்தில் காணமுடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 200 வருடங்கள் பழைமையான பலாமரம் ஒன்று இந்த கிராமத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது 27 அடி பருமனைக் கொண்ட மரமாகும் என கூறப்படுகின்றது.
தங்கள் பரம்பரை சொத்தாக இந்த பலாமரம் காணப்படுவதாகவும், அதனை வெட்டிச்செல்ல பலர் பல முறை முயற்சித்துள்ளனர். எனினும் அதற்கு தாம் அனுமதிக்கவில்லை என மரத்தின் உரிமையாளர் கபில பந்துல விஜேரத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக