தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 ஜனவரி, 2017

பூண்டை காதில் வைத்தால் நமது உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்: என்ன தெரியுமா?

உணவு வகையில் சிறந்த மருத்துவ பொருளாக நாம் பழங்காலம் முதலில் இருந்தே பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்று தான் பூண்டு.
இது வரை நாம் பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் தான் மருத்துவ பயன்கள் அதிகமாக கிடைக்கும் என்று நம்மில் பலபேர்கள் கூறுவதை கேட்டு இருப்போம் அல்லவா?
ஆனால் இப்போது நாம் பூண்டை காதில் வைத்துக் கொள்வதால் நமது உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
காதில் பூண்டை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • சிறு துண்டு பூண்டை எடுத்து நமது காதில் வைத்துக் கொள்வதால், நமது உடலில் ஏற்படும் வலி, வீக்கம், தலைவலி, காய்ச்சல், காதுவலி மற்றும் அதிகப்படியான உடல் சூடு ஆகிய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • இருமல் தொல்லை பிரச்சனையால் அதிகமாக கஷ்டப்படுபவர்கள், பூண்டு, தேன் கலந்து அதை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால், இருமல் நீங்குவதோடு, நல்ல புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
  • பூண்டு நமது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து, ரத்த சுழற்சியை சீராக்கி, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. எனவே தினமும் காலையில் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வர வேண்டும்.
  • பூண்டானது நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே இதனால் நமக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • பூண்டு ஃபங்கஸ் பிரச்சனைகளை சரி செய்யக் கூடிய ஒரு சிறந்த உணவு பொருளாகும். எனவே பூண்டு எண்ணெய்யை நமது சருமத்தில் தினமும் தடவி வந்தால், நல்ல மாற்றத்தை காணலாம்.
  • பூண்டில் இருக்கும் ஆன்டி- பாக்டீரியாக்கள், நமது உடம்பில் ஏற்படும் அலர்ஜி மற்றும் பல் வலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக