தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, January 25, 2017

மனைவியை மகிழ்ச்சிப்படுத்த கணவன் விட்டுத்தரவேண்டிய ஒரு சில விஷயங்கள்!



பெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
அதாவது பெண்களைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாமலேயே பெரும்பாலான ஆண்கள் "பெண்கள் ஒரு புதிர், திமிர் பிடித்தவர்கள், அகம்பாவம் பிடித்தவர்கள் யாரையும் மதிப்பதில்லை ....’ என, அவர்களை கறித்துக்கொட்டி ஒதுக்கித் தள்ளுகின்றனர்.
ஆனால் பெண்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, பெண்கள் மென்மையான இதழ்களை கொண்ட பூக்களை போன்றவர்கள். அவர்கள் புறக்கணிக்கப்படுவதாலேயே வெறுப்படைகின்றனர் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள். மனைவியை மகிழ்ச்சி படுத்த ஆண்கள் ஒரு சில விஷயங்களை செய்தாலே போது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மனைவி என்பவள் வேலைக்காரி அல்ல, அதேபோல் சம்பாதித்து கொடுக்கும் இயந்திரமும் அல்ல. பெண்கள் உணர்வு பூர்வமானவர்கள் என்பதை ஒவ்வொரு ஆண்களும் புரிந்து கொண்டு சரிசமமாக நடத்தவேண்டும் என்பதையே ஒவ்வொரு பெண்களும் எதிர்பார்ப்பார்கள்.
உங்கள் தாயைபோல் யாராலும் சமைக்க முடியாது தான், ஆனால் மனைவியின் சமையலையும் நன்றாக இருக்கிறது ஆகா, ஓகோ என்று பாராட்டுங்களேன். அவர்கள் உச்சிக்குளிர்ந்து போவார்கள். அதைவிட்டு விட்டு மனைவியின் சமையலை குறை சொல்லி அவர்களை கஷ்டபடுத்துவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.
விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக ஏதேனும் சமையல் செய்ய வேண்டும் என அவர்களை வற்புறுத்தக் கூடாது. சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவியாக இருந்து சமையல் வேளையை முடிக்க வேண்டும்.
குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது.
மனைவி உடுத்தும் உடைகளைப் பார்த்து இந்த உடை உனக்கு நன்றாக இருக்கிறது’ என பாராட்டுங்களேன். நீங்கள் அவ்வாறு கூறுவதால் ஏதேனும் இழப்பு ஏற்படப்போகிறதா ! இல்லையே வேண்டும்.
வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம். படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.
பெரும்பாலான பெண்களின் மனதை வாட்டும் விஷயம் குண்டாக இருப்பது. ஏனெனில் உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும். கணவர் அதை வாங்கிக் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.
பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற்றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

No comments:

Post a Comment