தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 ஜனவரி, 2017

நீங்கள் தினமும் பால் குடிப்பீங்களா? இவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

உடல் ஆரோக்கியத்திற்கும், எலும்புகள் வலமாக இருக்கவும் கால்சியம் சத்து நிறைந்த பாலை தினமும் அருந்துவோம்.
ஆனால் குழந்தைப் பருவத்தை தவிர்த்து மற்ற பருவங்களில் நாம் தினமும் அதிகமாக பால் குடித்து வருவதால், சில பக்க விளைவுகள் நம்மை தாக்குகின்றது அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
பால் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
  • பசுமாட்டின் பாலில் லாக்டோஸ் அதிகமாக உள்ளது. எனவே இது நமது உடம்பில் உள்ள குடல் மற்றும் செரிமான அமைப்பில் எரிச்சலை ஏற்படுத்தி, வாய்வுத் தொல்லையை அதிகரிக்கிறது.
  • பாலில் இருக்கும் லாக்டோஸ் ஒரு சகிப்புத் தன்மைக் கொண்டது. எனவே இது நமது வயிற்றில் தாங்கிக் கொள்ள முடியாத எரிச்சல் உணர்வுகளை ஏற்படுத்தி, செரிமான பிரச்சனை மற்றும் குமட்டலை ஏற்படுத்துகிறது.
  • ரீகாம்பினன்ட் போவைன் சொமடோட்ராஃபின் என்ற மரபணுக்கள் சார்ந்த ஊசியை மாடுகள் அதிகமாக பால் தருவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஊசி ஏற்றப்பட்ட மாட்டின் பாலை குடித்து வந்தால், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகின்றது.
  • மாட்டின் பாலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும். எனவே இந்த பாலை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுத்தால், அவர்களுக்கு இரும்புச்சத்து கிடைக்காமல், குடலில் ரத்த இழப்பு ஏற்பட்டு ரத்தசோகை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • பால் அதிகமாக குடிப்பதால் சளி அதிகரிக்கும். இதனால் தீவிரமான சுவாச பிரச்சனைகள் ஏற்படும். ஏனெனில் சில மாட்டின் வகைகளில் பீட்ட-சி.எம்.-7 என்ற புரதம் அடங்கியுள்ளது. இதனால் நமக்கு சுவாச மற்றும் செரிமான பாதையில் சளித்தொல்லை ஏற்படுகிறது.
  • பால் மற்றும் தயிரில் புரதம் 80% அடங்கியுள்ளது. எனவே இதில் உள்ள புரதம் சிலருக்கு ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி, சருமத்தில் அலர்ஜி பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக