இச்சட்டங்களில் கேள்விக்குறிய அதே சமயம் ஏற்றுக்கொள்ளாத வகையில் சில சட்டங்கள் இன்றளவும் நடைமுறையில் உள்ளன. இவற்றை தற்போது விரிவாக பார்ப்போம்.
பன்றிக்கு நெப்போலியன் எனப் பெயர் சூட்டக் கூடாது
பிரான்ஸ் நாட்டில் வளர்க்கப்படும் பன்றிக்கு எச்சூழ்நிலையிலும் ‘நெப்போலியன்’ எனப் பெயர் சூட்டக் கூடாது. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் மன்னரான நெப்போலியனை இது அவமதிக்கும் என்பதால் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது.
இறந்த சடலத்தை திருமணம் செய்துக்கொள்ளலாம்
பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்த ஆண் அல்லது பெண்ணின் சடலத்தை சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக்கொள்ளலாம். எனினும், ஒரு இறந்த சடலத்தை திருமணம் செய்துவிட்டு பிரான்ஸ் நாட்டு குடியுரிமையை பெற முடியாது.
ஏனெனில், ஜனாதிபதி அனுமதியுடன் சில சட்டத்திட்டங்களை பின்பற்றிய பிறகு தான் இத்திருமணம் நடைபெறும்.
ஒவ்வொரு குடிமகனின் வீட்டிலும் வைக்கோல் இருக்க வேண்டும்
பிரான்ஸ் நாட்டில் உள்ள பழமையான சட்டங்களில் இதுவும் ஒன்று. பழங்கலாத்தில் மன்னர் குதிரையில் வெளியே செல்லும்போது குதிரைக்கு பசித்தால் அது எங்கு நிற்கிறது அங்குள்ள வீட்டினர் வைக்கோல் கொடுக்க வேண்டும்.
இச்சட்டம் தற்போதும் நடைமுறையில் இருந்தாலும், மன்னராட்சி இல்லை என்பதால் இதனை மக்கள் பின்பற்றுவது இல்லை.
ஆண்களை போல் பெண்கள் விரும்பும் உடுப்புகளை அணிய முடியாது
பிரான்ஸ் நாட்டில் ஆண்கள் அணியும் உடுப்புகளை பெண்களும் அணிய விரும்பினால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அதற்கு அனுமதி பெற வேண்டும்.
அதாவது, ஆண்களை போல் ஜீன்ஸ், டி-ஷர்ட் போட வேண்டும் என்றால் அதற்கு பெண்கள் அனுமதி பெற வேண்டும்.
இதில் அதிர்ச்சியளிக்க கூடிய விடயம் என்னவென்றால் இச்சட்டம் இப்போதும் நடைமுறையில் உள்ளது. ஆனால், யாரும் இதனை பின்பற்றுவது இல்லை. காவல் துறையும் இதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை.
பொலிஸ் அதிகாரிகளை புகைப்படம் எடுக்க கூடாது
பிரான்ஸ் நாட்டில் பொலிஸ் அதிகாரிகளையும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களையும் பொதுமக்கள் புகைப்படம் எடுக்க தடை உள்ளது.
இதுமட்டுமில்லாமல், சிலர் புகைப்படம் எடுக்கும் நபர்களின் பின்புறத்தில் பொலிசார் அல்லது அவரது வாகனம் சென்றாலும் அதனை புகைப்படம் எடுக்க கூடாது.
பெண்கள் நீண்ட காற்சட்டைகளை அணியக்கூடாது
குதிரையேற்றம் அல்லது இரண்டு சக்கர வாகனப்பயணம் தவிர்த்து மற்ற நேரங்களில் பெண்கள் நீண்ட காற்சட்டைகளை(pants) அணிய இப்போதும் தடையுள்ளது.
இதுமட்டுமில்லாமல் குட்டைப்பாவாடைகளை அணிந்து வாகனங்கள் ஓட்டினால் மக்களின் கவனம் சிதறும் என்பதால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை யாரும் தற்போது பின்பற்றுவதில்லை.
பிரான்ஸ் கலைஞர்களின் இசையை தான் ஒலிப்பரப்ப வேண்டும்
பிரான்ஸ் நாடு முழுவதும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை உள்நாட்டு கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பாடல்களை மட்டுமே வானொலியில் ஒலிப்பரப்ப வேண்டும். அதாவது, ஒட்டுமொத்த இசையில் 70 சதவிகித இசை, பாடல்கள் உள்நாட்டு கலைஞர்களால் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
ரயில் நிலையங்களில் முத்தமிடுவதற்கு தடை உள்ளது
மேற்கத்திய நாடுகளில் பொது இடங்களில் காதலர்கள் கட்டிபிடித்து முத்தம் கொடுப்பது இயல்பான ஒன்று. ஆனால், பிரான்ஸ் நாட்டில் ரயிலில் பயணம் செய்யும்போது அல்லது ரயில் நிலையத்தில் இருக்கும்போது முத்தமிட சட்டப்பூர்வமாக தடை உள்ளது.
பணியில் மது அருந்தக் கூடாது
பணியில் இருக்கும்போது ஊழியர்கள் யாரும் மது அருந்தக் கூடாது. ஆனால், பீர் மற்றும் ஒயின் அருந்த அனுமதி உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான குடிமக்கள் ஒயினை தான் அதிகமாக விரும்பி குடிக்கின்றனர்.
தக்காளி சாஸ் பரிமாரக் கூடாது
பிரான்ஸ் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தக்காளி சாஸ்(ketchup) பரிமாரக் கூடாது. ஏனெனில், இது அமெரிக்க கலாச்சாரத்தை பிரதிபலிப்பதால் இதற்கு சட்டப்பூர்வமாக தடை உள்ளது.
நீச்சல் குளத்தில் ஷார்ட்ஸ் அணிந்து குளிக்க கூடாது
நீச்சல் குளங்களில் முட்டி வரை உள்ள ஷார்ட்ஸ் அணிந்துக்கொண்டு குளிக்க கூடாது. இது பெண்களுக்கும் பொருந்தும். இதற்கு பதிலாக உள்ளாடையை அணிந்துக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக