நம்மில் பலருக்கு வீட்டில் Air conditioner அதிக நேரம் இயங்கினாலே உடல் குளிரில் நடுங்க ஆரம்பித்து விடும்.
ஆனால் ரஷ்யா வில் உள்ள Oymyakon என்னும் கிராமம் தான் உலகிலேயே கடும் குளிரான இடமாக திகழ்கிறது.
ஆம், இந்த இடத்தில் -71.2 என்ற டிகிரி அளவில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த Oymyakon பற்றிய தனித்துவமான விடயங்கள் இதோ,
உலகிலேயே அதிக குளிர் பகுதியான இந்த ஊர் ’குளிர் துருவம்’ (Pole of Cold) என அழைக்கப்படுகிறது.
குளிர்காலத்தில் -71.2 டிகிரியில் இருக்கும் இந்த கிராம பகுதி ஜூன், ஜூலை போன்ற கோடை காலத்தில் 30 டிகிரி அளவிலான வானிலை கொண்டிருக்கிறது.
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது தான் பொதுவான காலம். ஆனால் Oymyakonல் டிசம்பர் மாதம் மட்டும் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் குறைந்து 21 மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது.
500க்கும் அதிகமானோர் வசிக்கும் இந்த கிராமத்தில் கடும் குளிரில் ஏதும் விளையாததால் இந்த ஊர் மக்களுக்கு மான் இறைச்சி மற்றும் குதிரை இறைச்சி மட்டுமே உணவாக இருக்கிறது.
இந்த கிராமத்தில் ஒரே ஒரு கடை மட்டுமே உள்ளது. இங்குள்ள மக்கள் அதிகளவில் பால் குடிப்பதால் இவர்களுக்கு ஊட்டச்சத்து பிரச்சனை ஏற்ப்படுவதில்லை.
இங்கு வசிப்பவர்களுக்கு மிருகங்களை வேட்டையாடுவது, மீன் பிடிப்பதும் தான் பிரதான தொழிலாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக